under review

மதுராந்தகம் நரேந்திரா

From Tamil Wiki
மதுராந்தகம் நரேந்திரா

மதுராந்தகம் நரேந்திரா (Narendra Madhuranthakam) (பிறப்பு: ஜூலை 16, 1957) தெலுங்கு எழுத்தாளர், கவிஞர். வெங்கடேஸ்வரா பல்கலையில் ஆங்கில இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

மதுராந்தகம் நரேந்திரா ஜூலை 16, 1957ல் புகழ்பெற்ற தெலுங்கு எழுத்தாளரான மதுராந்தகம் ராஜாராம் மற்றும் நாகபூஷ்ணம்மாவுக்கு ஆந்திரமாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் ரமணய்யகாரிபள்ளி என்னும் ஊரில் பிறந்தார். அவர் தந்தை ஆசிரியராகப் பணியாற்றினார். பணிநிமித்தம் பக்கால மற்றும் தாமல்செருவு என்னும் ஊர்களுக்கு இடம்பெயர்ந்தார். நரேந்திரா அந்த ஊர்களில் தொடக்கக் கல்வி பயின்றார்.

பள்ளிக்கல்விக்குப் பின்னர் நரேந்திரா மருத்துவப்பணியாளர் படிப்புக்கு நரேந்திரா பாலிடெக்னிக் பள்ளியில் சேர்ந்தாலும் முடிக்கவில்லை. தனிப்பயிற்சியில் பள்ளிநிறைவுக் கல்லூரிப் படிப்பை முடித்து ஆங்கில இலக்கியத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். ரவீந்திரநாத் தாகூரின் படைப்புகளை ஆராய்ந்து எம்.பில் பட்டமும், நயன்தாரா செகல் படைப்புகளை ஆராய்ந்து முனைவர் பட்டமும் பெற்றார்.

தனிவாழ்க்கை

நரேந்திராவின் மனைவி ஶ்ரீலதா. சிந்தூரா, இந்துமித்ரா என இரண்டு மகள்கள். நரேந்திரா ஆங்கிலப் பேராசிரியராக ஶ்ரீவெங்கடேஸ்வரா பல்கலை (திருப்பதி)யில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

இலக்கிய வாழ்க்கை

நரேந்திரா மாணவப் பருவத்திலேயே எழுதத் தொடங்கினார். தன் பதினாறாவது வயதில் இறுதிவிடை என்னும் கதையை எழுதினார். ஆந்திரஜோதி உள்ளிட்ட இதழ்களில் தொடர்ச்சியாக எழுதியவர் முனைவர் ஆய்வுக்காலத்திற்குப் பின் தீவிர இலக்கியவாதியாகச் செயல்படத்தொடங்கினார். நரேந்திரா நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். ஆம்ஸ்டர்டாமில் அற்புதம், மனோதர்மபராகம் தொடங்கி ஒன்பது நாவல்களையும் எழுதியுள்ளார். புதுக்கவிதைத் தொகுதி வெளிவந்துள்ளது.

நரேந்திரா ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். இலக்கிய தொகுதிகளையும் உருவாக்கியுள்ளார்.

விருதுகள்

  • மதராஸ் தெலுங்கு அகாதமி விருது, 1994
  • கதை விருது - புதியதில்லி, 1994
  • ஜ்யேஷ்ட புரஸ்காரம் - விசாப்பட்டணம் ATA விருது, 2001
  • மெக்சிகோ பல்கலைக்கழக விருது, 2005
  • பருச்சூரி ராஜாராம் விருது - குண்டூர், 2006
  • தெலுங்கு பல்கலைக்கழக விருது, 2007
  • கேது விஸ்வநாதரெட்டி விருதுகள், நந்தலூர், 2009
  • ரவீந்திரநாத் தாகூர் விருது, நெல்லூர், 2012
  • பெட்டிப்பொட்ல சாஹித்ய விருது, விஜயவாடா, 2012
  • கேந்திரிய சாகித்ய அக்காதமி விருது, 2022

நூல்கள்

English
  • Microcosms of Modern India,
  • Kathanjal
Telugu to English
  • Book - Munivahanudu: Kolakaluri Enoch.
  • Story - The masquerade Indian Literature
  • Story - The Eternal Twain
  • Story - Ever and Forever Telugu Short Stories

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-Nov-2025, 10:22:56 IST