under review

ப்ரியா தம்பி

From Tamil Wiki
ப்ரியா தம்பி

ப்ரியா தம்பி (பிறப்பு: மார்ச் 17) ஊடகத்துறை சார்ந்த எழுத்தாளர், சிறுகதையாசிரியர், கட்டுரையாளர், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் வசனம், திரைக்கதைகள் எழுதிவருகிறார்.

ஊடகவியல்

ப்ரியா தம்பி கேரள‌த்தின் கைரளி நிறுவனம், சுட்டி விகடன், தமிழ் முரசு, கிழக்கு பதிப்பகம், குமுதம் ரிப்போர்ட்டர், டாக்டர் விகடன் ஆகிய ஊடகங்களில் பணி செய்தார்.

இலக்கிய வாழ்க்கை

ப்ரியா தம்பி இதழ்களில் கட்டுரைகள், சிறுகதைகள் எழுதினார். ’பேசாத பேச்செல்லாம்’ என்ற கட்டுரைத்தொடர் விகடன் பிரசுரம் மூலம் வெளிவந்தது. ‘மின்னுவும் அம்மாவும்’ கயல் கவின் பதிப்பகம் மூலம் வெளிவந்தது.

திரை வாழ்க்கை

ப்ரியா தம்பி தொலைக்காட்சித் தொடர் நாடகங்களுக்கு வசனங்கள் எழுதி வருகிறார். கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இயக்குநர் திருச்செல்வத்தின் ’பொக்கிஷம்’ தொலைக்காட்சித் தொடருக்கு முதன் முதலில் வசனம் எழுதினார். தொடர்ந்து விஜய் டிவியில் 'தர்மயுத்தம்' என்ற தொடருக்கு வசனம் எழுதினார்.

வசனம் எழுதிய நாடகத் தொடர்கள்
  • பொக்கிஷம்
  • தர்மயுத்தம்
  • ஆஃபீஸ்
  • 7 B
  • பகல் நிலவு (2016)
  • மெளன ராகம் (2017 to 2021)
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் (2018- 2020)
  • பாக்கியலட்சுமி

மதிப்பீடு

பெண்கள் அதிகம் பார்க்கும், பெண் கதாபாத்திரங்களைச் சுற்றி பெரும்பாலும் சுழலும் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களில் பெண்கள் அதிகமும் வசனம் எழுத வரவேண்டும் என்ற கருத்தை முன்வைப்பவர் ப்ரியா தம்பி. தொலைக்காட்சித் தொடர்களில் , மாமியார்- மருமகள் சண்டை, பெண்களுக்கிடையேயான பழி வாங்குதல் போன்ற எதிர்மறை அம்சங்கள் இல்லாமல் இயல்பான குடும்பங்களை, இயல்பான பெண்களை காண்பித்தும் வெற்றி அடைய முடியும் என்பதைத் தொலைக்காட்சித் தொடர்களில் நிரூபித்தவர்.

நூல்கள் பட்டியல்

  • பேசாத பேச்செல்லாம் (விகடன் பிரசுரம்)
  • மின்னுவும் அம்மாவும் (கயல் கவின்)

உசாத்துணை

இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 24-Jun-2024, 21:19:46 IST