under review

பீட்டர் புரூக்ஸ்

From Tamil Wiki
Peter Brook.jpg

பீட்டர் புரூக்ஸ் (மார்ச் 21, 1925 - ஜூலை 2, 2022) நாடக ஆசிரியர், திரைப்பட இயக்குநர். மகாபாரத காவியத்தை பிரெஞ்சு மொழியில் ஒன்பது மணி நேர நாடகமாக இயக்கியவர்.

பிறப்பு, கல்வி

பீட்டர் புரூக் மனைவி நடாஷா பெர்ரி உடன்

பீட்டர் ஸ்டீபன் பால் புரூக் மார்ச் 21, 1925 அன்று மேற்கு லண்டனில் உள்ள சிஸ்விக் நகரில் பிறந்தார். தந்தை சிமன் புரூக் (Simon Brook), தாயார் இடா (Ida - Judelson), மூத்த சகோதரர் அலேக்சிஸ் (Alexis). புரூக்ஸ் தன் பள்ளி படிப்பை வெஸ்ட்மினிஸ்டர் பள்ளியிலும், கிரெஸ்கெம் பள்ளியிலும் பயின்றார். 1945-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் உள்ள மெக்டெலேன் கல்லூரியில் (Magdalen College) ஆங்கிலம், பிரெஞ்ச் மொழிகளில் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

பீட்டர் புரூக்ஸ் 1951-ம் ஆண்டு நடாஷா பெர்ரியை (Natasha Parry) மணம் செய்து கொண்டார். இருவருக்கும் இரண்டு குழந்தைகள் இரினா (Irina, நடிகர், இயக்குநர்), சிமன் (Simon, இயக்குநர்). பெர்ரி 2015-ம் ஆண்டு தன் 84 வயதில் இயற்கை எய்தினார்.

பொது வாழ்க்கை

நாடக வாழ்க்கை
பால் ஸ்கோஃபீல்ட் உடன் பீட்டர் புரூக்ஸ் (1964)

பீட்டர் புரூக்ஸ் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். பின்னர் தன் குழந்தைப்பருவ உடல்நிலை கோளாறு காரணமாக ராணுவத்திலிருந்து விலகினார். புரூக்ஸ் 1943-ம் ஆண்டு தன் பதினெட்டு வயதில் மார்லோவ்ஸ் எழுதிய டாக்டர் ஃபாஸ்டுஸ் (Doctor Faustus) நாடகத்தை இயக்கினார். இது புரூக்ஸ் இயக்கிய முதல் நாடகம், லண்டனில் உள்ள டார்ச் தியேட்டரில் திரையிடப்பட்டது. பின் 1945-ம் ஆண்டு டாக்டர் ஃபாஸ்டுஸ் நாடகத்தை காக்டியோஸின் (Cocteau's) தி இன்பெர்னல் மிஷின் (The Infernal Machine) நாடகத்திற்கு போட்டியாக சாண்டிக்லீர் தியேட்டரில் திரையிட்டார்.

பர்மிங்கெம் ரெப்போட்டரி தியேட்டரின் (Birmingham Repertory Theatre) மேடை இயக்குநராக 1945-ம் ஆண்டு பதவி ஏற்றார். 1947-ம் ஆண்டு ஸ்டாண்ட்போர்டில் உள்ள ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டரில் 'ரோமியோ ஜூலியட் (Romeo and Juliet)’, 'லவ்ஸ் லேபர்ஸ் லாஸ்ட் (Love's Labour's Lost)’ என இரண்டு நாடகத்திற்கு உதவி இயக்குநராகப் பணியாற்றினார். 1947 முதல் 1950 வரை லண்டனில் உள்ள ராயல் ஓப்ரா ஹவுஸில் தயாரிப்பு இயக்குநராகப் பணியாற்றினார். ராயல் ஓப்ரா ஹவுஸில் புச்சினி (Puccini) எழுதிய 'லே போகிமி’ (La boheme) நாடகத்தை 1899-ல் பயன்படுத்திய நாடக அரங்கைக் கொண்டு 1948-ம் ஆண்டு நிகழ்த்தினார். 1949-ம் ஆண்டு சர்ச்சைக்குரிய ரிச்சர்ட் ஸ்ட்ராஸின் (Richard Strauss) சலோமா (Salome) நாடகத்தை அரங்கேற்றினார். அதன் நாடக அரங்கை சால்வதோர் டாலி (Salvador Dalí) வடிவமைத்தார்.

மனைவி நடாஷா பெர்ரி

1950 -ம் ஆண்டிற்கு பின் ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் அக்கால முன்னணி நடிகர்களான ஜான் கில்குட் (John Gielgud), பால் ஸ்கோஃபீல்ட் (Paul Scofield), லாரன்ஸ் ஓலிவியர் (Laurence Olivier) ஆகியோர் வைத்து நாடகங்கள் இயக்கினார். லண்டன், நியூயார்க், பாரிஸ் போன்ற பல முன்னணி நகரங்கள் நாடகம் தயாரிக்கவும், ஷேக்ஸ்பியர், டி.எஸ்.எலியட், டென்னிஸி வில்லியம்ஸ், அர்தர் மில்லர் போன்றவர்கள் முன்னணி நாடக ஆசிரியர்களின் கதையை நாடகமாகவும் அரங்கேற்றினார்.

1962-ம் ஆண்டு முதல் பீட்டர் ஹாலுடன் (Peter Hall) இணைந்து ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியின் இயக்குநராகப் பணியாற்றினார். பீட்டர் ஹாலுடன் 1964-ம் ஆண்டு ஜெர்மன் நாடக ஆசிரியர் பீட்டர் வீஸ் எழுதிய மராட்/சதே (Marat/Sade) நாடகத்தை ஆங்கில மொழியில் தயாரித்தார். இது திரையிடப்பட்ட முதல் ஆங்கில மொழி நாடகம். அந்நாடகம் 1965 -ம் ஆண்டு பிராட்வே திரையரங்கில் திரையிடப்பட்டது. சிறந்த நாடகத்திற்கான டோனி விருதையும் பெற்றது. புரூக் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார். 1966--ம் ஆண்டு இருவரும் இணைந்து வியட்நாம் போருக்கு எதிரான புரட்சி நாடகத்தை அமெரிக்காவில் அரங்கேற்றினர்.

1970 -ம் ஆண்டு ட்ரேபீஸ் மற்றும் ஸ்டில்ட்ஸ் கொண்டு 'ஏ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம்' (A Midsummer Night's Dream) நாடகத்தின் வானொலி வடிவத்தை ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனிக்காக புரூக் இயக்கினார். இந்நாடகம் புரூக்கின் குறிப்பிடத்தக்க சாதனையாகக் கருதப்படுகிறது. இந்நாடகம் கனவு, கட்டுக்கதை, புறக்கணித்த காதல்களை நாடக வடிவில் எடுத்த முன்னோடி முயற்சி.

தாக்கம் செலுத்திய ஆளுமைகள்
பீட்டர் புரூக் மனைவி நடாஷா பெர்ரி வைத்து இயக்கிய நாடகம், யுவர் ஹாண்ட் இன் மைன்

பீட்டர் புரூக்ஸின் நாடக வாழ்க்கையில் அண்டோனின் அர்டாட் (Antonin Artaud) என்பவருடைய தாக்கம் அதிகமாக இருந்தது. அர்டாட்டின் குரூரத்தின் திரையரங்கம் என்கின்ற யோசனை புரூக்ஸின் நாடகத்தில் தாக்கம் செலுத்தியது. இங்கிலாந்தில் 1964 -ம் ஆண்டு ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் பீட்டர் புரூக்ஸ் சார்லஸ் ம்ராவிட்ஸ் (Charles Marowitz) உடன் இணைந்து தி தியேட்டர் ஆப் க்ருயாலிட்டி சீசன் (1964) நாடகத்தை இயக்கினார்.

ஜோயன் லிட்டில்வுட் (Joan Littlewood) தாக்கம் புரூக்ஸின் நாடகத்தில் பெரிதும் தென்பட்டது. புரூக்ஸ் ஜோயன் லிட்டில்வுட் பற்றிக் குறிப்பிடும் போது, "லிட்டில்வுட் இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் வாழ்ந்த பிரிட்டன் நகரின் சிறந்த இயக்குநர்" என்கிறார். மேலும் ஜெர்ஸி க்ரோடோவ்ஸ்கி (Jerzy Grotowski), பெர்டோல்ட் ப்ரிஸ்ட் (Bertolt Brecht), கிரிஸ் கோவிக்ஸ் (Chris Covics), விசவோலாட் மெயர்ஹோல்ட் (Vsevolod Meyerhold) ஆகியோரின் எக்ஸ்பிரிமென்டல் தியேட்டர் என்ற கோட்பாடும் புரூக்ஸின் நாடகங்களில் செல்வாக்கு செலுத்தின. ஜி. ஐ. குர்ட்ஜிஃப் (G. I. Gurdjieff), எட்வர்ட் ஜோர்டன் க்ரயாஹ் (Edward Gordon Craig), மடிலா ஜீகா (Matila Ghyka) ஆகியோரின் தாக்கமும் புரூக்ஸ் நாடகத்தில் இருந்தது.

Peter Brook3.jpg
திரைப்பட வாழ்க்கை

புரூக்ஸ்1970-ல் லண்டனில் நகரை விட்டு பாரிஸ் சென்று அங்கே இன்டர்நேஷனல் சென்டர் ஆப் தியேட்டர் ரிசர்ச் (International Centre of Theatre Research) உருவாக்கினார். அது ஒரு சோதனை திரையரங்கம். இந்த அரங்க குழுவுடன் பல நாடுகளுக்கு பயணம் செய்து போதை அடிமை, மன நோயாளி போன்ற பல நாடகங்களை அரங்கேற்றினார். தி கான்ஃபரென்ஸ் ஆப் தி பேர்ட்ஸ் (The Conference of the Birds) என்னும் பாரசீகக் கவிதையை நாடகமாக பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா நாடுகளில் அரங்கேற்றினார். புரூக்ஸ் மகாபாரதத்தை பிரெஞ்ச், ஆங்கில மொழிகளில் ஒன்பது மணி நேர நீண்ட நாடகமாக அரங்கேற்றினார். அது பின்னாளில் தொலைக்காட்சி தொடராகவும், திரைப்படமாகவும் மாறியது. இது பீட்டர் புரூக்ஸின் தனிப்பட்ட சாதனையாகக் கருதப்படுகிறது.

புரூக்ஸ் 1963-ம் ஆண்டு லார்ட் ஆப் தி ப்லைஸ் (Lord of the Flies), தி டிராஜெடி ஆப் கார்மென் என்னும் (The Tragedy of Carmen) இரண்டு படங்களை இயக்கினார். தி டிராஜெடி ஆப் கார்மென் படத்தின் மேடை நாடகத்திற்கு புரூக்ஸ் பல விருதுகளைப் பெற்றார். 1971-ல் பால் ஸ்கோஃபீல்ட் (Paul Scofield) நாயகனாக கிங் லீயர் படத்தை திரையில் இயக்கினார்.

மகாபாரதம்
பீட்டர் புரூக்ஸ் இயக்கிய மகாபாரதம்

1975-ல் எழுத்தாளார் ஜீன் க்லாவுட் கெராரி (Jean-Claude Carrière) உடன் இணைந்து இந்திய காவியமான மகாபாரதத்தை மேடை நாடகமாக இயக்கினார். 1985-ம் ஆண்டு மகாபாரதம் மேடை நாடகமாக புரூக்ஸ் இயக்கத்தில் அரங்கேற்றப்பட்டது.

2015 -ம் ஆண்டு புரூக்ஸ் மீண்டும் மகாபாரத்தை நியூ யெங்க் விக் புரோடெக்‌ஷன் உடன் இணைந்து இயக்கினார். ஜீன் க்லாவுட் கெராரி, மெரி ஹெலினே எஸ்டின்னி (Marie-Hélène Estienne) இருவரும் திரைக்கதை எழுதினர்.

டியர்னோ போக்கர் (Tierno Bokar)
டியர்னோ போக்கர் (மாலி சூஃபி)

2005 -ம் ஆண்டு புரூக்ஸ் 'டியர்னோ போக்கர்' நாடகத்தை இயக்கினார். டியர்னோ போக்கர் மாலி பேரரசு காலத்தில் வாழ்ந்த சூஃபி. இந்நாடகம் மெரி ஹெலினே எஸ்டின்னி எழுதிய 'ஏ ஸ்பிர்ட் ஆப் டாலரன்ஸ்: தி இன்ஸ்பியரிங் லைப் ஆப் டியர்னோ போக்கர்' (A Spirit of Tolerance: The Inspiring Life of Tierno Bokar ) என்னும் புத்தகத்தை மூலமாகக் கொண்டு இயக்கப்பட்டது.

மறைவு

பீட்டர் புரூக்ஸ் ஜுலை 2, 2022 அன்று தன் 97-ஆவது வயதில் காலமானார்.

நினைவு ஆவணப்படம்

2012-ம் ஆண்டு பீட்டர் புரூக்ஸின் இரண்டாவது மகன் சிமன்,கேமராவை மறைத்து வைத்து புரூக்ஸின் இயக்கும் பாணியை 'தி டயிட்ரோப்’ (The Tightrope) என்னும் ஆவணப்படமாக்கினார்.

விருதுகள்

  • பீட்டர் புரூக்ஸ் 2021-ம் ஆண்டிற்கான இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்றார்.
  • Tony Award for Best Direction of a Play for Marat/Sade, 1966
  • Tony Award for Best Direction of a Play for A Midsummer Night's Dream, 1971
  • Brigadier Prize, 1975, for Timon of Athens
  • Grand Prix Dominique, 1981
  • Laurence Olivier Award, 1983
  • Emmy Award, 1984, for La tragédie de Carmen
  • Prix Italia, 1984
  • Europe Theatre Prize, 1989.
  • International Emmy Award, 1990, for The Mahabharata
  • Kyoto Prize in Arts and Philosophy, 1991
  • Praemium Imperiale, 1997
  • Dan David Prize, 2005
  • The Ibsen Award for 2008, first winner of the prize of NOK 2.5 mill.
  • Critics' Circle Award for Distinguished Service to the Arts 2008.

அங்கீகாரங்கள்

  • Commander of the Order of the British Empire, 1965
  • Induction into the American Theater Hall of Fame, 1983
  • Honorary DLitt, University of Birmingham, 1990
  • Honorary Fellow of Magdalen College, Oxford, 1991
  • Honorary DLitt, University of Strathclyde, 1990
  • Honorary DLitt, University of Oxford, 1994
  • Officier de l'Ordre de la Légion d'honneur (France), 1995
  • Companion of Honour, 1998 (He previously declined a knighthood.)
  • President's Medal by the British Academy, 2011
  • Commandeur de la Légion d'honneur (France), 2013
  • Princess of Asturias Award in Arts, 2019
  • Padma Shri (India), 2021

நினைவு நூல்கள்

  • The Empty Space, Penguin (2008), Brook, Peter (1968)
  • The Shifting Point, UK: Methuen Drama, Brook, Peter (1988)
  • Brook, Peter (1991). Le Diable c'est l'ennui.
  • Brook, Peter (1993). There Are No Secrets. Methuen Drama.
  • Brook, Peter (1995). The Open Door.
  • Brook, Peter (1998). Threads of Time: Recollections.
  • Brook, Peter (1999). Evoking Shakespeare. Nick Hern Books (2nd Ed 2002).
  • Brook, Peter (23 April 2013). The Quality of Mercy: Reflections on Shakespeare. Nick Hern Books.
  • Brook, Peter (14 September 2017). Tip of The Tongue: Reflections on Language and Meaning. Nick Hern Books.
  • Brook, Peter (24 October 2019). Playing by Ear: Reflections on Sound and Music. Nick Hern Books

நாடகங்கள்

ராயல் ஷேக்ஸ்பியர் கம்பெனியில் இயக்கியது
  • 1946 Love's Labour's Lost (Shakespeare Memorial Theatre)
  • 1947 Romeo and Juliet (Shakespeare Memorial Theatre)
  • 1950 Measure for Measure, with John Gielgud (Shakespeare Memorial Theatre)
  • 1952 The Winter's Tale, with John Gielgud (Shakespeare Memorial Theatre)
  • 1955 Titus Andronicus, with Laurence Olivier and Vivien Leigh (Shakespeare Memorial Theatre)
  • 1957 The Tempest, with John Gielgud (Shakespeare Memorial Theatre)
  • 1962 King Lear with Paul Scofield
  • 1964 Marat/Sade
  • 1966 US, an anti-Vietnam War protest play with The Royal Shakespeare Company, documented in the film Benefit of the Doubt
  • 1970 A Midsummer Night's Dream, with John Kane (Puck), Frances de la Tour (Helena), Ben Kingsley (Demetrius) and Patrick Stewart (Snout): see 1970 Royal Shakespeare Company production of A Midsummer Night's Dream
  • 1978 Antony and Cleopatra, with Glenda Jackson, Alan Howard, Jonathan Pryce, Alan Rickman, Juliet Stevenson, Patrick Stewart and David Suchet
பிற முக்கிய நாடகங்கள்
  • 1951 : A Penny for a Song, by John Whiting
  • 1955 : Hamlet, with Paul Scofield
  • 1956 : A View from the Bridge, by Arthur Miller
  • 1958 : The Visit, with Alfred Lunt and Lynn Fontanne
  • 1964 : Marat/Sade, by Peter Weiss
  • 1968 : Oedipus with John Gielgud and Irene Worth, adapted by Ted Hughes, National Theatre
  • 1971 : Orghast, by Ted Hughes
  • 1974 : Timon d'Athènes, adaptation by Jean-Claude Carrière, Théâtre des Bouffes du Nord
  • 1975 : Les Iks, by Colin Turnbull, adaptation Jean-Claude Carrière, Théâtre des Bouffes
  • 1977 : Ubu aux Bouffes, after Alfred Jarry, Théâtre des Bouffes
  • 1978 : Mesure pour mesure, by William Shakespeare, Théâtre des Bouffes
  • 1979 : La Conférence des oiseaux (The Conference of the Birds), after Farid al-Din Attar, Festival d'Avignon; Théâtre des Bouffes
  • 1979 : L'Os de Mor Lam, by Birago Diop, Théâtre des Bouffes
  • 1981 : La Tragédie de Carmen, after Prosper Mérimée, Henri Meilhac and Ludovic Halévy, Viviane Beaumont Theater, Lincoln Center, New York City
  • 1981 : La Cerisaie, by Anton Chekhov, Théâtre des Bouffes
  • 1984 : Tchin-Tchin, by François Billetdoux, directed with Maurice Bénichou, with Marcello Mastroianni, Théâtre Montparnasse
  • 1985 : Le Mahabharata (The Mahabharata), Festival d'Avignon
  • 1988 : The Cherry Orchard by Anton Chekhov, Majestic Theatre, Brooklyn
  • 1989 : Woza Albert!, by Percy Mtawa, Mbongeni Ngema and Barney Simon
  • 1990 : La Tempête, by William Shakespeare, adaptation by Jean-Claude Carrière, with Sotigui Kouyaté, Théâtre des Bouffes
  • 1992 : Impressions de Pelléas, after Claude Debussy, Théâtre des Bouffes
  • 1993 : L'Homme Qui, after The Man Who Mistook His Wife for a Hat by Oliver Sacks
  • 1995 : Qui est là, after texts by Antonin Artaud, Bertolt Brecht, Edward Gordon Craig, Vsevolod Meyerhold, Konstantin Stanislavski and Motokiyo Zeami
  • 1995 : Oh les beaux jours, by Samuel Beckett
  • 1998 : Je suis un phénomène, after prodigieuse mémoire by Alexander Luria
  • 1998 : Don Giovanni by Mozart, for the 50th Festival International d'Art Lyrique d'Aix-en-Provence
  • 1999 : Le Costume, by Can Themba
  • 2000 : Hamlet by William Shakespeare, with Adrian Lester
  • 2002 : Far Away, by Caryl Churchill
  • 2002 : La Mort de Krishna, extract from Mahabharata de Vyasa, adaptation by Jean-Claude Carrière and Marie-Hélène Estienne
  • 2003 : Ta main dans la mienne, by Carol Rocamora
  • 2004 : Tierno Bokar, after Vie et enseignement de Tierno Bokar-Le sage de Bandiagara by Amadou Hampâté Bâ, with Sotigui Kouyaté
  • 2004 : Le Grand Inquisiteur, after The Brothers Karamazov by Dostoyevsky
  • 2006 : Sizwe Banzi est mort, by Athol Fugard, John Kani and Winston Ntshona, Festival d'Avignon
  • 2008 : Fragments, after Samuel Beckett
  • 2009 : Love is my sin, sonnets by William Shakespeare
  • 2009 : 11 and 12, after Vie et enseignement de Tierno Bokar-Le Sage de Bandiagara by Amadou Hampâté Bâ
  • 2010 : Warum warum, by Peter Brook and Marie-Hélène Estienne after Antonin Artaud, Edward Gordon Craig, Charles Dullin, Vsevolod Meyerhold, Motokiyo Zeami and William Shakespeare
  • 2011 : A Magic Flute, an adaptation of Mozart's The Magic Flute, directed with Marie-Hélène Estienne, composer Franck Krawczyk to positive reviews at the Gerald W. Lynch Theater of John Jay College.
  • 2013 : The Suit, after Can Themba's tale, directed with Marie-Hélène Estienne and Franck Krawczyk
  • 2015 : Battlefield, from The Mahabharata and Jean-Claude Carrière's play, adapted and directed by Peter Brook and Marie-Hélène Estienne
  • 2018 : The Prisoner, written and directed by Peter Brook and Marie-Hélène Estienne
  • 2019 : 'Why?' . Written and directed by Peter Brook and Marie-Hélène Estienne

திரைப்படங்கள்

  • 1953: The Beggar's Opera
  • 1960: Moderato Cantabile (UK title Seven Days... Seven Nights) with Jeanne Moreau and Jean-Paul Belmondo
  • 1963: Lord of the Flies
  • 1967: Ride of the Valkyrie
  • 1967: Marat/Sade
  • 1968: Tell Me Lies
  • 1971: King Lear
  • 1979: Meetings with Remarkable Men
  • 1979: Mesure pour mesure
  • 1982: La Cerisaie
  • 1983: La Tragédie de Carmen
  • 1989: The Mahabharata
  • 2002: The Tragedy of Hamlet (TV)
  • 2012: The Tightrope (documentary film, co-written and directed by Simon Brook)

உசாத்துணை


✅Finalised Page