under review

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன்

From Tamil Wiki

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர். மருத்துவம் சார்ந்த நூல்களை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் இலங்கை பத்கொட ஹல்தும்முல்லை-ஊவாமாகாணத்தில் பாலகிருஸ்ணன், பத்மினி இணையருக்குப் பிறந்தார். கொழும்பில் வசிக்கிறார். ஹல்தும்முல்லை தமிழ் மத்திய கல்லூரியில் ஆரம்பக் கல்வி கற்றார். பதுளை தனியார் தாதியர் கல்லூரியில் தாதியர் கற்கை நெறியை நிறைவு செய்தார். தனியார் வைத்தியசாலைகளில் தாதியாகப் பணியாற்றினார். ஊடகத்துறையிலும் இணையத்திலும் பணிபுரிந்தார்.

இலக்கிய வாழ்க்கை

பிரியதர்ஷினி விக்னேஸ்வரன் 2015-ல் 'ஆரோக்கியம்' என்ற மருத்துவம் சார்ந்த நூலை வௌியிட்டார். 'பழைமையும் பன்மையும்', 'அவள் ஒரு அதிசய தாரகை' ஆகிய நூல்களையும் வெளியிட்டார்.

நூல் பட்டியல்

  • ஆரோக்கியம்
  • பழைமையும் பன்மையும்
  • அவள் ஒரு அதிசய தாரகை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 27-May-2024, 09:10:30 IST