under review

பசுமை விகடன்

From Tamil Wiki
பசுமை விகடன் இதழ்

பசுமை விகடன் (2007) ஆனந்த விகடன் குழுமத்திலிருந்து வெளியான இதழ். சுற்றுச் சூழல் பற்றியும், நவீன மற்றும் பாரம்பரிய விவசாயம் பற்றியும் மக்கள் விரிவாக அறிந்து செயல்பட பசுமை விகடன் இதழ் தொடங்கப்பட்டது.

வெளியீடு

ஆனந்த விகடன் குழுமத்தால் ஜனவரி 2017-ல் தொடங்கப்பட்ட பசுமை விகடன் இதழ், தொடக்க காலத்தில் 66 பக்கங்களுடன், பத்து ரூபாய் விலையில் மாதமிருமுறை இதழாக வெளிவந்தது.

பசுமை விகடன் இதழ் ’மண்ணின் வளமே மக்கள் வளம்’ என்ற வாசகத்தைத் தனது முகப்பில் கொண்டிருந்தது. 2024-ல், இதழின் விலை ரூபாய் 25/-

உள்ளடக்கம்

விவசாயத்துறை தொடர்பான செய்திகளோடு சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஊட்டுவதையும், பாரம்பரியமான பசுமை விவசாயத்தை மீட்டெடுப்பதையும் தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு பசுமை விகடன் இதழ் வெளிவந்தது.

தேங்காய் உரிக்கும் கருவி, பால் கறக்கும் இயந்திரம், தீவனம் நறுக்கும் கருவி போன்ற பல புதிய கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகள் பசுமை விகடனில் இடம் பெற்றன. நவீனத் தொழில்நுட்பங்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றன.

நெல் நடவில் ரோபோ, விவசாயத்தில் ரசாயனங்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்கான வழிமுறைகள், இயற்கை வேளாண்மை பற்றிய செய்திகள், இயற்கை வேளாண்மைப் பண்ணைகள் பற்றிய தகவல்களை பசுமை விகடன் இதழ் வெளியிட்டது.

உலக அளவிலும், இந்திய அளவிலும் விவாசாயம் சார்ந்து நிகழ்ந்த பல முக்கியமான நிகழ்வுகளை தமிழ் வாசகர்கள் அறியச் செய்தது பசுமை விகடன், மண்ணையும், மண் வளம் காப்பதையும் முக்கிய நோக்கமாக வலியுறுத்தி வெளிவந்தது.

மதிப்பீடு

பசுமை விகடன் இதழ் விவசாயம் சார்ந்த முக்கியச் செய்திகளை விவசாயப் பெருமக்களிடம் கொண்டு சேர்ப்பதையும், விவசாயிகள் நலன் குறித்து நிபுணர்கள் மற்றும் அறிஞர்களின் சிந்தனைகளை வெளிப்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது

உசாத்துணை


✅Finalised Page