under review

நாரதீய சம்ஹிதை

From Tamil Wiki

நாரதீய சம்ஹிதை : ஆகம விளக்க நூல். பாஞ்சராத்ர ஆகம முறையைச் சேர்ந்தது

காலம்

நாரதீய சம்ஹிதை பொ.யு. 4-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டது என கணிக்கப்படுகிறது.

அமைப்பு

நாரதிய சம்ஹிதை 30 அத்தியாயங்களில் 3000-க்கும் மேற்பட்ட வரிகளைக் கொண்ட நூல். பிருகு முனிவர் கௌதமருக்கு நாரதர் கற்பித்தவற்றை அத்ரி முனிவரிடம் விவாதிக்கும் வகையில் அமைந்தது.

உள்ளடக்கம்

பாஞ்சராத்ர மரபை விளக்கும் நாரதீய சம்ஹிதை வைணவ வழிபாடு மற்றும் சடங்குகள் பற்றி விவாதிக்கிறது. அவ்ற்றை கோயிலமைப்பு, விழாக்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறது .

பாஞ்சராத்ர முறையில் முதல் ஆகமநூல்களை விஷ்ணுவே வாசுதேவனாக வந்து வெளிப்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. வழிநூல்கள் முனிவர்களால் சொல்லப்பட்டவை என்னும் பொருளில் 'முனிப்ரோக்த' எனப்படுகின்றன. முனிவர்களால் சொல்லப்பட்ட நூல்கள் சாத்விகம், ராஜஸம், தாமஸம் என மூன்று வகைப்படும் . நாரதீய சம்ஹிதை சாத்விக வகையைச் சேர்ந்தது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Jun-2024, 05:45:46 IST