under review

நமது நகரத்தார் (இதழ்)

From Tamil Wiki

நமது நகரத்தார் (1996) சென்னை அம்பத்தூரிலிருந்து வெளிவந்த நகரத்தார் சார்பான இதழ். ஏ.எல். அழகப்பன் இவ்விதழின் ஆசிரியர்.

பிரசுரம், வெளியீடு

நமது நகரத்தார் இதழ் சென்னை அம்பத்தூரிலிருந்து, அக்டோபர் 15, 1996 முதல் வெளிவந்ததது. டெம்மி அளவில் 30 பக்கங்களைக் கொண்ட இதழாக ’நமது நகரத்தார்’ இதழ் வெளிவந்தது. தனிப்பிரதி விலை ரூபாய் நான்கு. 'வாய்மையை மதிப்போம், தூய்மையைத் துதிப்போம். என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியது. ஏஎல். அழகப்பன் இவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

உள்ளடக்கம்

நகரத்தார் தொடர்பான செய்திகளுக்குச் சிறப்பிடம் கொடுத்து வெளியிட்ட ’நமது நகரத்தார்' இதழில், அச்சமூகத்தின் பிரச்சினைகள் குறித்த தலையங்கங்களும் கட்டுரைகளும் இடம் பெற்றன. .

இதழ் நிறுத்தம்

நமது நகரத்தார் இதழ் எவ்வளவு காலம் வெளிவந்தது என்ற விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

நகரத்தார் சமூகம் சார்ந்த செய்திகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட இதழாக நமது நகரத்தார் இதழ் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், மெய்யப்பன் தமிழாய்வகம் வெளியீடு, பதிப்பாசிரியர்: ச. மெய்யப்பன்; இணை ஆசிரியர்கள்: கரு. முத்தய்யா, சபா. அருணாசலம். பதிப்பு: 2002



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Jun-2024, 09:43:11 IST