under review

தேன்மொழி தாஸ்

From Tamil Wiki
தேன்மொழி தாஸ்

தேன்மொழி தாஸ் (பிறப்பு:1976) தமிழில் எழுதி வரும் கவிஞர். எழுத்தாளர், இயக்குனர், பாடலாசிரியர், திரைக்கதையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

தேன்மொழி தாஸின் இயற்பெயர் சுதா. மேற்குத் தொடர்ச்சி மலையில் மணலாறு என்னும் தேயிலைத் தோட்டப் பகுதியில் 1976-ல் பிறந்தார். காஞ்சிபுரத்தில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

தேன்மொழி தாஸ்

1996 -களில் எழுதத் தொடங்கினார். முதல் கவிதைத் தொகுதி "இசையில்லாத இலையில்லை" 2001-ல் வெளியானது. அநாதி காலம் (2003), ஒளியறியாக் காட்டுக்குள் (2007), நிராசைகளின் ஆதித்தாய்(2016), காயா(2017) ஆகியவை இவருடைய பிற கவிதைத் தொகுப்புகள்.

திரைப்படம்

இயக்குநர் பாரதிராஜாவின் உதவியாளராகப்பணிபுரிந்தார். ஐம்பதுக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதினார். ஈரநிலம் என்னும் திரைப்படத்தில் பாடல்களும் உரையாடலும் எழுதி, உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். உரை நடை ஆசிரியராகவும், பாடலாசிரியராகவும் இணை இயக்குநராகவும் தமிழ் திரை உலகில் பணியாற்றினார்.

விருதுகள்

தேன்மொழி தாஸ்
  • தேவமகள் அறக்கட்டளை விருது, சிற்பி இலக்கிய விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, கவித்தூவி விருது ஆகிய விருதுகளை இசையில்லாத இலையில்லை கவிதைத் தொகுப்பிற்குப் பெற்றார்.
  • ஈரநிலம் என்ற திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசு சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதினை 2003-ம் ஆண்டு வழங்கியது.
வல்லபி - தேன்மொழி தாஸ்

நூல்கள் பட்டியல்

  • இசையில்லாத இலையில்லை(2001)
  • அநாதி காலம் (2003)
  • ஒளியறியாக் காட்டுக்குள் (2007)
  • நிராசைகளின் ஆதித்தாய்(2014)
  • காயா(2016)
  • வல்லபி (2017)

இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page