under review

துறையூர் ஓடைகிழார்

From Tamil Wiki

துறையூர் ஓடைகிழார் சங்க காலப் புலவர். இவர் எழுதிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.

வாழ்க்கைக் குறிப்பு

காவிரி ஆற்றின் கரையில் அமைந்த திருச்சி துறையூரில் பிறந்தார். வறுமையில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

புறநானூற்றின் 136-ஆவது பாடல் இவர் பாடியது. இப்பாடலில் பொதிகை மலைச் சாரலைச் சார்ந்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் வள்ளலைச் சிறப்பித்துப் பாடினார்.

பாடல் நடை

  • புறநானூறு: 136

ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்,
எனக் கருதிப், பெயர் ஏத்தி,
வா யாரநின் இசை நம்பிச்,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்; 20
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
அனைத் துரைத்தனன் யான்ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்!

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-Apr-2023, 18:24:54 IST