under review

திருமயிலைப் புராணம்

From Tamil Wiki
மயிலாப்பூர் புராணம்

திருமயிலைப் புராணம் (1924) ( திருமயிலைத் தலபுராணம்) சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் -கற்பகாம்பாள் ஆலயத்தைப் பற்றிய தலபுராணம். இதை எழுதியவர் மயிலை நாதமுனி முதலியார்.

எழுத்து, வெளியீடு

திருமயிலை புராணம் மயிலை நாதமுனி முதலியார் எழுதிய செய்யுள் நூல். இது ஶ்ரீலஶ்ரீ மயிலை தணிகாசல முதலியார் மாணவராகிய மயிலை நாதமுனி முதலியாரால் பாடப்பெற்று, கோமளேசுவரன்பேட்டை வித்வான் ம.இராஜகோபால பிள்ளையால் பார்வையிடப்பட்டு கதிர்வேலு முதலியாரின் நோபில் பிரசில் 1924-ல் பதிப்பிக்கப்பட்டது.

உள்ளடக்கம்

மயிலை தலபுராணம் வடமொழியில் சைவ மகாபுராணத்து, கோடி ருத்ர ஸம்ஹிதையில், உத்க்ருஷ்ட ச்வக்ஷேத ப்ரகரணத்தில் 11 அத்யாயம் கொண்ட கபாலீச ஸ்தல மாஹாத்ம்யம் என்னும் பெயரில் உள்ளது. மயூரபுரி புராணம் என்னும் நூலும் சம்ஸ்கிருதத்தில் உள்ளது.

குன்றக்குடி ஆதீனத்தின் மயிலைக் கிளை மடத்தின் ஸ்ரீமத் அமிர்தலிங்கத் தம்பிரான் சுவாமிகள் இயற்றிய மயிலாப்பூர் தலபுராணம் 1895-ல் வெளிடப்பட்டது. அதையொட்டி எழுதப்பட்ட திருமயிலைத் தலபுராணம் மயிலை நாதமுனி முதலியாரால் எழுதப்பட்டது.

மயிலை தலபுராணம் பன்னிரெண்டு படலங்களையும், ஐந்நூறு செய்யுளையும் கொண்டது. பிற்சேர்க்கை உட்பட மொத்தம் 806 செய்யுட்களைக் கொண்டுள்ளது. (இதில் கபாலீச்சுவரம் மட்டுமின்றி, சுற்றிலுமுள்ள வெள்ளீசர், வாலீசர், முண்டகக்கன்னியம்மை, மல்லீசர், காரணீசர், விருபாட்சீசர், தீர்த்தபாலீசர் முதலிய சன்னிதிகளும் கூறப்பட்டுள்ளன.)

இலக்கிய இடம்

இது கபாலீஸ்வரர் வரலாற்றைச் சொல்லும் மரபான செய்யுள்நூல்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 12-Dec-2022, 18:32:07 IST