under review

சோதிகா ரெத்தினேஸ்வரன்

From Tamil Wiki

சோதிகா ரெத்தினேஸ்வரன் ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

சோதிகா ரெத்தினேஸ்வரன் இலங்கை யாழ்ப்பாணம் கொக்குவிலில் பிறந்தார். தந்தை ரெத்தினேஸ்வரன். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி வணிகப் பிரிவில் கல்வி கற்றார்.

இலக்கிய வாழ்க்கை

சோதிகா ரெத்தினேஸ்வரன் சிறு வயது முதல் பாடசாலைகளில் கவிதை போட்டிகளில் கலந்து கொண்டார். 'ஆகிஷாவின் அர்த்தங்கள்' எனும்பெயரில் முகநூலில் கவிதை எழுதினார். ”itr Swiss fm” எனும் வானொலியில் இவரின் கவிதை 'இதயம் பேசியதே' நிகழ்ச்சியில் தொகுக்கப்பட்டு முதல் முதலில் ஒலிபரப்பப்பட்டது. உலக சாதனை நூல் வெளியீடான '1300 கவிதைத் தொகுப்பு' நூலில் இவரின் கவிதை இடம்பெற்றது.

விருதுகள்

  • Future Kalam, Universal achieve சான்றிதழ் பெற்றுள்ளார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jun-2024, 04:53:01 IST