under review

சொன்சொகொன்

From Tamil Wiki
Son.jpg

சொன்சொகொன் பழங்குடியினர் மலேசியாவின் சபா மாநிலத்தில் வாழ்கின்றனர். இவர்கள் கடசான் டூசுன் கிமாராகான் வகையினரின் உப பிரிவைச் சேர்ந்தவர்கள். கிமாராகாங் பழங்குடியினரிடமிருந்து சொன்சொகொன் பழங்குடியினர் வசிப்பிடத்திலும் மொழியிலும் வேறுபட்டுள்ளனர்.

வாழிடம்

சொன்சொகொன் பழங்குடியினர் கோத்தா மருதுவிலும் பிதாஸ் வட்டாரம், மொம்பு கிராமத்திலும் வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பகுதிகள் மலேசியாவின் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவை. இதனால், சொன்சொகொன் பழங்குடியினரிடம் முழுமையான கல்வி, சுகாதார வசதிகள் சென்றடையவில்லை.

தொழில்

சொன்சொகொன் பழங்குடியில் மிகச்சிலரே அரசாங்கப் பணிகளில் இருக்கின்றனர்.

பெயர் காரணம்

சொன்சொகொன் என்ற வார்த்தை கோத்தா மருது மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நதியைக் குறிக்கிறது. இந்த நதி கோத்தா மருது-பிடாஸ்-சண்டகன் எல்லைக்கு அருகில் உள்ளது. ஒரு காலத்தில் சொன்சொகன் நதி உள்ளூர் சபா மாநிலத்தினரின் மத்தியில் மிகவும் பிரபலமான நதிகளில் ஒன்றாக இருந்தது. இந்நதி செழுமையாகவும் வளமான வனப்பகுதியையொட்டி இருந்ததாலும் மக்கள் இந்நதியோரம் வாழ்ந்தனர். இவர்களை இந்நதியின் பெயராலேயே குறிப்பிடுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

தொன்மம்

இளைஞர் ஒருவர் தன்னோடு வயதில் மூத்த பெண்மணியை மணக்க வேண்டுமெனும் விருப்பத்துடன் இருந்தார். இதை இரு வீட்டாரும் ஏற்கவில்லை. இதனால், அவர்களின் திருமணம் தள்ளிப் போனது. தொடர்ந்த பிரச்சனைகளால், இருவரும் தங்களின் உறவுகளை உதறிவிட நினைத்தனர். பிறர் வற்புறுத்தலால் நடந்த இந்த உறவு துறத்தலை சொன்சொக் என குறிப்பிட்டனர்.

உசாத்துணை


✅Finalised Page