under review

செய்கு அலாவுதீன் புலவர்

From Tamil Wiki

செய்கு அலாவுதீன் புலவர் (பத்தொன்பதாம் நூற்றாண்டு) ஈழத்து தமிழ்ப்புலவர்.

வாழ்க்கைக் குறிப்பு

செய்கு அலாவுதீன் புலவர் புத்தளத்தைச் சேர்ந்த கரைத்தீவில் பிறந்தார். பள்ளியில் கல்வி கற்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடைக்காலத்தில் தன் கண்பார்வையை இழந்தார்.

இலக்கிய வாழ்க்கை

செய்கு அலாவுதீன் புலவர் கவிபாடும் ஆற்றல் உடையவர். பிராணயாமம் செய்வதைக் குறித்துச் ‘சரநூல்’ என்னும் பெயருடன் தத்துவஞான நூல் எழுதினார். அது வெளியிடப்படவில்லை. இவர் இயற்றிய ’வழிநடைச் சிந்து’ நூலும் வெளியாகவில்லை. இவர் இயற்றியவற்றுள், 'நவவண்ணக் கீர்த்தனை' என்னும் நூலும், அ.வி. மயில்வாகனன் தொகுத்து வெளியிட்ட சில பாடல்கள் மட்டுமே இதுவரை கிடைத்துள்ளன. புளிச்சான்குளத்தைச் சேர்ந்த அலி உதுமான் இயற்றிய ’கீர்த்திமஞ்சரி’ என்னும் நூலை இவர் விரித்துப் பாடினார்.

நூல் பட்டியல்

  • சரநூல்
  • வழிநடைச் சிந்து
  • நவவண்ணக் கீர்த்தனை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-May-2023, 18:20:11 IST