under review

சுபத்ரா கிருபாகரன்

From Tamil Wiki

சுபத்ரா கிருபாகரன் (பிறப்பு: அக்டோபர் 30, 1956) ஈழத்துப் பெண் நடனக்கலைஞர், நடன ஆசியர்.

வாழ்க்கைக் குறிப்பு

சுபத்ரா கிருபாகரன் இலங்கை அனுராதபுரத்தில் அக்டோபர் 30, 1956-ல் பிறந்தார். மட்டக்களப்பு திசவீரசிங்கம் சதுக்கத்தில் வசிக்கிறார்.

கலை வாழ்க்கை

சுபத்ரா கிருபாகரன் ஒரு நடன ஆசிரியர். நடன கலாமணி ம.கைலாயபிள்ளை, கீதாஞ்சலி, கே.நல்லையா, உடையார், கே.லஷ்மணன், பிரம்மஸ்ரீ என்.வீரமணி ஆகியோரைக் குருவாகக் கொண்டவர். பரதகலாலயா நாட்டியக் கூடத்தை நடத்தி வருகிறார். இதன் வழியாக சிறந்த நடன கலைஞர்களை உருவாக்கினார்.

விருதுகள்

சுபத்ரா கிருபாகரன் பரத சூடாமணி, நாட்டியக் கலாமணி, நர்த்தன வித்தகி, நிருத்தியவாணி, நிருத்தியப்போராளி ஆகிய பட்டங்களைப் பெற்றார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-May-2024, 03:33:24 IST