under review

சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி

From Tamil Wiki
சுங்கை என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுங்கை (பெயர் பட்டியல்)
பள்ளி சின்னம்

தேசிய வகை சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில், சபாக் பெர்ணம் மாவட்டத்தில் இயங்கும் தமிழ்ப்பள்ளி. பள்ளியின் பதிவு எண் BBD6039.

வரலாறு

சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 1890-ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. 1890-ம் ஆண்டில் இப்பள்ளி அதிகாரப்பூர்வமற்ற நிலையில் இயங்கியது. 1983-ம் ஆண்டு சுங்கை பெர்ணம் தோட்டத்தில் வேலை செய்ய தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களும் தெலுங்கர்களும் கொண்டு வரப்பட்டப் பிறகு, சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டது.

சுங்கை பெர்ணம் 2.jpg

தொடக்கக் காலத்தில், சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தமிழ்மொழியும் தெலுங்கு மொழியும் கற்பிக்கப்பட்டன. பள்ளியில் போதிக்க தமிழ்நாட்டிலிருந்தும் ஆந்திரப் பிரதேசத்திலிருந்தும் ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர். பள்ளி தோட்ட நிர்வாகத்தினரால் கண்காணிக்கப்பட்டது.1957-ம் ஆண்டிற்குப் பிறகு, பள்ளி மலேசிய கல்வி அமைச்சால் கண்காணிக்கப்படத் தொடங்கியது.சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியராக சாமிக்கண்ணு பணியாற்றினார்.

கட்டிடம்

ஆரம்பக்காலத்தில் தோட்டத்தில் உள்ள கோயிலின் வளாகத்தில் போதிய வசதிகளின்றி பள்ளிக் கட்டிடம் அமைந்திருந்தது. சுங்கை பெர்ணம் தோட்டத் தொழிலாளர்களின் வேண்டுகோளின்படி, 'யுனைடெட் ப்லாண்டேஷன்' பள்ளிக்கு ஒரு புதிய கட்டிடத்தைக் கட்டித் தந்தது. 1950-ம் ஆண்டு தோட்ட நிர்வாகம் பள்ளி மாணவர்களின் புறப்பாடத் தேவைக்காக விளையாட்டு மைதானத்தையும் உருவாக்கித் தந்தது.

தோட்ட நிறுவனத்தால் கட்டித் தரப்பட்ட கட்டிடம்

1980-ல் தலைமையாசிரியராகப் பணியாற்றிய மணிசெல்வராஜ் சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஏற்பட்ட வகுப்பறைத் தேவையினைப் பூர்த்தி செய்யக் கூட்டு மனப்பான்மையில் வகுப்பறைகள் கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். டிசம்பர் 16, 2009 தலைமையாசிரியராகப் பணியாற்றிய A.நாராயணன் ஸ்ரீ முயற்சியில் ஜூலை 1, 2010-ல் பள்ளியில் 2 வகுப்பறைகளைக் கொண்ட ஓர் இணைக் கட்டிடம் கட்டப்பட்டது.

இன்றைய நிலை

பாலர் பள்ளி

சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி சிறு எண்ணிக்கையிலான மாணவர்களைக் கொண்டு இன்றளவும் இயங்கி கொண்டு வருகின்றது. ஓரளவு போதிய அடிப்படை வசதிகளைக் கொண்டு மாணவர்கள் சுங்கை பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் கல்வி கற்கின்றனர்.

உசாத்துணை

  • க. முருகன், சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் (2015).
  • SJKT LADANG SUNGAI BERNAM


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 09-Sep-2024, 18:43:08 IST