under review

சாந்தி விக்டர்

From Tamil Wiki

சாந்தி விக்டர் (பிறப்பு: பிப்ரவரி 18, 1966) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர், அரசியல்வாதி.

வாழ்க்கைக் குறிப்பு

சாந்தி விக்டர் இலங்கை கிளிநொச்சி, பரந்தனில் பொன்னையா, இந்திராணி இணையருக்கு பிப்ரவரி 18, 1966-ல் பிறந்தார். கிளிநொச்சி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை கற்றார்.

அரசியல் வாழ்க்கை

2018-ல் பரந்தன் வட்டாரம் கரைச்சி பிரதேச தேர்தலில் பெண் வேட்பாளராக தமிழ் தேசியக்கூட்டமைப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்று பிரதேச சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யப்பட்டு அரசியல் ரீதியாக மக்களுக்குச் சேவை செய்தார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடி வருகிறார். கிளிநொச்சி இரணைமடு விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பாகவும் போராடினார்.

இலக்கிய வாழ்க்கை

சாந்தி விக்டர் 1980 முதல் கவிதை, சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார். இவரின் ஆக்கங்கள் வீரகேசரி, ஈழநாதம் ஆகிய நாளிதழ்களில் வெளிவந்தன. 'உயிர் சுமந்த சுமை' என்னும் இவரின் கவிதைத் தொகுதியின் முதலாம் பாகம் 2015-ல் வெளியானது. 'ஆயிரம் கவிஞர்களின் கவிதை' நூலிலும் இவரின் இரு கவிதைகள் இடம்பெற்றன.

நூல் பட்டியல்

  • உயிர் சுமந்த சுமை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 11-Mar-2024, 03:23:58 IST