under review

சா.ராம்குமார்

From Tamil Wiki
சா.ராம்குமார்

சா. ராம்குமார் (செப்டெம்பர் 19, 1987) ராம்குமார் தமிழில் சிறுகதைகள் எழுதிவரும் எழுத்தாளர். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகப் பணியாற்றுபவர்

பிறப்பு, கல்வி

சா.ராம்குமார் கர்னாடகா மாநிலத்தில் மைசூரில் செப்டெம்பர் 19, 1987-ல் சாத்தூரப்பன்,.விஜயாம்பாள் இணையருக்குப் பிறந்தார். பள்ளிக்கல்வி 2003 வரை கோவையில் உள்ள நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி. மேல்நிலைக்கல்வி 2005-ல் கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் மேல் நிலைப்பள்ளி. உளவியல் இளங்கலை (2008) கோவையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில். சமூகப்பணியியல் முதுகலை 2010 சென்னை சமூகப்பணிக் கல்லூரி.

தனிவாழ்க்கை

ராம்குமார் அபினயாவை மே 09, 2016-ல் மணந்தார். ஒரு மகன் வீரநாராயண். இந்திய ஆட்சிப்பணியில் சேர்ந்த ராம்குமார் இணைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத்துதுறையாக பணியாற்றினார். பின்னர் இயக்குனர், மேகாலயா அரசு நிர்வாகப் பயிற்சி மையத்தில் பணியாற்றினார்

இலக்கியவாழ்க்கை

சா.ராம்குமாரின் முதல் படைப்பு ’அகதி’ என்னும் சிறுகதை தொகுப்பு. தமிழினி பதிப்பகம் இதை 2020-ல் வெளியிட்டது. புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அசோகமித்ரன், கி.ராஜ நாராயணன், ஜெயமோகன்ஆகியோர் இலக்கிய ஆக்கத்தில் செல்வாக்கு செலுத்தினர் என்கிறார். "நான் எழுதும் கதைகளின் வழியே நான் கண்டடைய நினைப்பது சில உண்மைகளையே என்று தோன்றுகிறது. உண்மைகள் என்பது பழக்கப்பட்ட வார்த்தையாக இருந்தாலும் அவற்றை தனிப்பட்ட முறையில் நாம் நேரில் சந்திக்க பெரும்பாலும் விரும்புவதில்லை. அதற்குக் காரணம் அவை ஜீரணிக்கும் வகையில் இருப்பதில்லை என்றே எண்ணுகிறேன். அப்படிப்பட்ட உண்மைகள் கசப்பாக துவர்ப்பாக இருந்தாலும் அதை சமைத்து ஜீரணிக்கும் அளவு செய்வதே நான் கதை சொல்வதற்கான காரணம்." என சா.ராம்குமார் அகதி நூலின் முன்னுரையில் குறிப்பிடுகிறார்[1].

இலக்கிய இடம்

அசோகமித்திரனின் குறைத்துச்சொல்லும் அழகியல் முறைமைப்படி யதார்த்தமான வாழ்க்கைச்சித்திரங்களை எழுதுபவர் சா.ராம்குமார் "ராம்குமாரின் எழுத்து நடையைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். சில கதைகளில் அவரது நிதானமான நடையுடன் கூடி ஆங்காங்கு வெளிப்படும் நகைச்சுவைத் சித்தரிப்புகள் கதைகளை புன்னகையுடன் வாசிக்க வைக்கினறன என்று காளிப்பிரசாத் சொல்கிறார்[2].

நூல்பட்டியல்

  • 'அகதி’ சிறுகதை தொகுப்பு - தமிழினி பதிப்பகம், 2020
  • 'தேவியின் தேசம்’, பயண இலக்கியம் - தமிழினி பதிப்பகம், 2021

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page