under review

ச. கந்தையாபிள்ளை

From Tamil Wiki

ச. கந்தையாபிள்ளை (1880 - 1958) ஈழத்து தமிழ்ப்புலவர், பத்திரிக்கையாசிரியர்.

வாழ்க்கைக் குறிப்பு

ச. கந்தையாபிள்ளை இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் என்னும் ஊரில் சபாபதிப்பிள்ளை, காமாட்சியம்மை இணையருக்கு 1880-ல் மகனாகப் பிறந்தார். சுன்னாகம் அ. குமாரசுவாமிப் புலவரின் மாணவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர். கொழும்பு ஆங்கில ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் தமிழ் விரிவிரையாளராக பத்து ஆண்டுகள் பணியாற்றினார். கல்வித் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் தமிழ்ப் பரீட்சகராகவும் பணியாற்றினார். 1922-ம் ஆண்டில் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்று, இந்தியாவுக்குச் சென்று சிறிது காலம் புதுச்சேரியில் வாழ்ந்தார்.

இலக்கிய வாழ்க்கை

’உண்மை முத்திநிலை ஆராய்ச்சி’, ’திருவாசக உண்மை’ என்னும் நூல்களை ச. கந்தையாபிள்ளை இயற்றினார். ’வித்தகம்’ என்னும் பெயருடன் வாரப் பத்திரிகை ஒன்றை பல ஆண்டுகளாக நடத்தினார்.

மறைவு

ச. கந்தையாபிள்ளை 1958-ல் காலமானார்.

நூல் பட்டியல்

  • உண்மை முத்திநிலை ஆராய்ச்சி
  • திருவாசக உண்மை

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Mar-2023, 06:43:43 IST