under review

கைருந்நிஸா புஹாரி

From Tamil Wiki

கைருந்நிஸா புஹாரி (20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

கைருந்நிஸா புஹாரி இலங்கை கேகாலை மாவட்டம் தெதிகம வறக்காபொலையில் முஹம்மது உமர், உம்மு ஸகீனா இணையருக்குப் பிறந்தார். வறக்காபொலை பாபுல் ஹஸன் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார்.

பாடசாலை கூட்டுறவுச் சங்க செயலாளராகவும், ஐக்கிய முஸ்லிம் சங்க பிரதம கணக்காளராகவும் பணியாற்றினார். டட்லி சேனாநாயக்க உயர் தொழில்நுட்பக் கலலூரியில் தமிழ் மொழி மூலக் கற்கை நெறிக்குப் பணிப்பாளராகவும் இருந்தார். பகுதி நேர விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

இலக்கிய வாழ்க்கை

கைருந்நிஸா புஹாரி கவிதை, கட்டுரை, சிறுகதைகள் எழுதினார். இவரின் படைப்பு ஒன்று 1970-ல் இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் இடம்பெற்ற 'நவரசக் கோவை' நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. இவரின் பெரும்பாலான படைப்புகள் வானொலியில் ஒலிபரப்பாகின.

உசாத்துணை

  • ஆளுமை:கைருந்நிஸா, புஹாரி: noolaham


✅Finalised Page