கு. பச்சைமால்
கு. பச்சைமால் ( 06-மே-1943 - 24 ஜூன் 2025) தமிழ் இலக்கியச் செயல்பாட்டாளர், தமிழறிஞர். சொற்பொழிவாளர். தமிழ்நாட்டில் குமரிமாவட்டத்தில் இலக்கியச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்தார்.
பிறப்பு, கல்வி
கு.பச்சைமால் தமிழ்நாட்டில் குமரி மாவட்டம் சாமித்தோப்பில் 06 மே 1943-ல் பிறந்தார். தமிழிலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
தனிவாழ்க்கை
கு. பச்சைமால் நாகர்கோயில் கார்மல் மேல்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார்.
அமைப்புப் பணிகள்
கு. பச்சைமால் தமிழாலயம் என்னும் அமைப்பை நிறுவி குமரிமாவட்டத்தில் தொடர்ச்சியாக இலக்கிய நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். மரபிலக்கியம், நவீன இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளை அமைத்தார்.
இலக்கியப் பணிகள்
கு. பச்சைமால் தமிழிலக்கியச் செய்திகளை திரட்டி ஆய்வு நூல்களை எழுதினார். நாஞ்சில் வள்ளுவன், ஔவையார் பற்றிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. குமரிமாவட்ட சித்தர்கள் பற்றிய அவருடைய நூல் அந்த தளத்தில் முன்னோடியானது.
இலக்கிய இடம்
கு. பச்சைமால் கன்னியாகுமரி மாவட்ட சித்தர்கள் பற்றிய நூலுக்காக அறியப்படுகிறார். தமிழாலயம் என்னும் அமைப்பின் வழியாக நடத்திய இலக்கிய ஒருங்கிணைப்பும் அவருடைய பங்களிப்பு.
நூல்கள்
- கன்யாகுமரி சித்தர்கள்
- முதல்பாவலர் திருவள்ளுவர்
- ஔவையார்
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Jun-2025, 21:13:13 IST