under review

களவேள்வி

From Tamil Wiki

களவேள்வி வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போர்க்களத்தில் வேள்வி செய்தல் என்பது இதன் பொருள். வெற்றி பெற்ற மன்னன் பேய்களுக்கு ஊன் விருந்தளித்தலைக் கூறுவது.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கொல்லும் வலிமை மிக்க பேய்கள் வயிறார உண்ணுமாறு மிக்க வலிமையுடைய வேந்தன் களவேள்வி செய்தல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

அடுதிறல் அணங்கு ஆர
விடுதிறலான் களம் வேட்டன்று(கொளு 8.6)

வெண்பா

பிடித்தாடி அன்ன பிறழ்பல்பேய் ஆரக்
கொடித்தானை மன்னன் கொடுத்தான் - முடித்தலை
தோளொடு விழுந்த தொடிக்கை துடுப்பாக
மூளையம் சோற்றை முகந்து (160)

பொருள் : வெற்றிக் கொடியினை உயர்த்திய படையையுடைய மன்னவன், எயிற்றினையுடைய பிறழ்ந்த பற்களையுடைய பேய்கள் உண்ணுமாறு , மகுடம் அணிந்த தலையாகிய மிடாவிலே, தோளுடன் வெட்டுண்டு வீழ்ந்த கையே துடுப்பாகக் கொண்டு, மூளையாகிய அழகிய சோற்றை முகந்து வழங்கினான்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 10:31:08 IST