under review

கணிவன் முல்லை

From Tamil Wiki

கணிவன் முல்லை முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. போரிட்டுப் பெற்ற வெற்றியாக இல்லாமல் இயல்பாகப் பெறும் மேம்பாடான வெற்றியை முல்லை என்று குறிப்பிடுவர்.அரசன், சான்றோர், வேளார் முதலானோர் பெறும் மேம்பாட்டினை வாகைத் திணை கூறுகிறது. (கணிவன் - சோதிடன்). சோதிட நூல் வல்லவனின் மேம்பாட்டைக் கூறுவது கணிவன் முல்லை.காலக் கணிதன் எனவும் கணிவன் குறிப்பிடப்படுகிறான்

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

துணிபு உணரும் தொல் கேள்விக்
கணிவனது புகழ் கிளந்தன்று(கொளு 8.20)

வெண்பா

புரிவின்றி யாக்கைமேல் போற்றுவ போற்றிப்
பரிவின்றி பட்டாங்கு அறியத் - திரிவின்றி
விண்ணி இவ்உலகம் விளைக்கும் விளைவெல்லாம்
கண்ணி உரைப்பான் கணி (174)

பொருள்: தன் உடலைப் பேணுவதைப் போலக் கல்வி அறிவைத் தவறாது பேணி, மக்கள் வருந்தாமல் உண்மையை உணரும் வாகையால் தவறு ஏதும் இன்றி வானமும் நிலவுலகும் விளைவிக்கும் நிகழ்ச்சிகளை எல்லாம் எண்ணிக் கூறுவான் கணிவன்.

உசாத்துணை

வாகைத் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்

‎


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 06-Jul-2025, 09:49:30 IST