இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா
- இளையராஜா என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: இளையராஜா (பெயர் பட்டியல்)
- பிரகாஷ் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பிரகாஷ் (பெயர் பட்டியல்)
இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா (பிறப்பு: செப்டம்பர் 9, 1981) நாதஸ்வரக் கலைஞர். நான்காம் தலைமுறைக் கலைஞர். தந்தை கே.எஸ். வேதமூர்த்தியின் மாணவர்.
பிறப்பு, கல்வி
இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் என்ற ஊரில் கே.எஸ். வேதமூர்த்தி, ஞானசுந்தரி இணையருக்கு செப்டம்பர் 9, 1981-ல் பிறந்தார். தந்தை நாதஸ்வரக் கலைஞர். உடன்பிறந்தவர் ஒரு அக்கா.
வே. பிரகாஷ் இளையராஜா அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசையியல் சான்றிதழ் கல்வியைப் பெற்றார்.
தனிவாழ்க்கை
இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா ஏப்ரல் 13, 2009-ல் கார்த்திகாவை மணந்தார். மகள் ராகமஞ்சரி. மகன் கவின். மகன் ஐந்தாம் தலைமுறை நாகசுர கலைஞர்.
கலை வாழ்க்கை
இடும்பாவனம் வே. பிரகாஷ் இளையராஜா இசைக்கல்வியை தனது தாத்தா தவில் மேதை இடும்பாவனம் எம்.கே. செளந்தரராஜா பிள்ளையிடம் தொடங்கினார். எட்டாவது வயது முதல் தனது தந்தை கே.எஸ். வேதமூர்த்திபிள்ளையிடம் ஆரம்ப பாடங்களைக் கற்றார். பின்பு நாதஸ்வர வித்வான் சேகல். ஜி. ரங்கநாதனிடம் ஐந்து ஆண்டுகள் குருகுல கல்வி கற்றார்.
மேலதிக இசை நுணுக்கங்களை கீழ்வேளூர் என்.ஜி. கணேசனிடம் கற்றார். பொறையாறு வேணுகோபால் பிள்ளையிடம் கீர்த்தனைகள் மற்றும் இசை நுணுக்கங்கள் கற்றார். 2009-ல் அகில இந்திய வானொலியில் முதல் தரக் கலைஞரானார். தற்போது சின்னமனூர் ஏ. விஜய் கார்த்திகேயனுடன் இணைந்து வாசித்து வருகிறார்.
விருதுகள்
- இசைமாமணி - ஸ்ரீதேவி குருகுல சபரிபீடம் - கொழும்பு (2002)
- காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் - காஞ்சி மடம் (2008)
- கலைஞான சிகரம் - தென் சோழமண்டலம் இசை வேளாளர் சங்கம் (2009)
- பெருவங்கிய கலையரசு - தமிழிசைமன்றம் திருவையாறு (2015)
- நாதசுர கலாவித்தகர் - தமிழ்க் கழகம், தஞ்சாவூர் (2017)
- யுவபுரஸ்கார் மத்திய அரசின் சங்கீத நாடக அகாடெமி (2020)
- நாதஸ்வர கலாநிதி திருகயிலாய தருமபுர ஆதீனம் (2023)
உசாத்துணை
- இசைத்தமிழ்க் கலைஞர்கள் நோக்கீட்டு நூல், முனைவர் மு. இளங்கோவன்
- Youngsters in traditional nagaswaram and thavil playing families raise hopes about the future of these instruments - The Hindu
- Refreshing notes from the Cauvery - 'Ponni Punal', a DVD series is aimed at reviving the melam traditions, The Hindu , March 2018
வெளி இணைப்புகள்
- Ragam:Thodi - Nagaswaram Idumbavanam V.Prakash Ilayaraja
- Ragam: Nattakurinji - Nagaswaram Idumbavanam V.Prakash Ilayaraja
- Nagaswaram Idumbavanam V Prakash Ilayaraja & P Kavin Prakash - youtube
- Ragamalika - Chinnamanoor A. Vijay Karthikeyan & Idumbavanam V. Prakash Ilayaraja
- Nagaswaram Idumbavanam V.Prakash Ilayaraja - youtube
- Nagaswaram Idumbavanam V.Prakash Ilayaraja - Youtube
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-Jul-2024, 12:41:28 IST