under review

அஸீமா பேகம்

From Tamil Wiki

அஸீமா பேகம் (பிறப்பு : பொ.யு. 20-ம் நூற்றாண்டின் பிற்பகுதி) ஈழத்துப் பெண் எழுத்தாளர், கவிஞர்.

வாழ்க்கைக் குறிப்பு

அஸீமா பேகம் இலங்கை கம்பஹா மாவட்டம் பூகொடையில் மொஹமத் நஜிமுதீன், ஸம்ஸுன் நயீமா இணையருக்குப் பிறந்தார். பேராதனைப் பல்கலைக்கழகப் புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றார். ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

இலக்கிய வாழ்க்கை

அஸீமா பேகத்தின் முதல் கவிதை 'இழிவுரனோ' 'கவிதை அரங்கம்' என்னும் கவிதைப் பக்கத்தில் 2002-ல் வெளியானது. தினகரன் பத்திரிகையின் வாரமஞ்சரியின் கவிதைப் பூங்காப் பக்கம் இவர் தொடர்ந்து எழுதுவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது. 2016-ல் இவரின் முதலாவது தொகுப்பான 'செங்குருதியும் பச்சோந்தியும்' கவிதை நூல் வெளியானது. தினகரன் பத்திரிகை மற்றும் 'அல்ஹஸனாத்', 'அல் இன்ஷிரவாஹ்', 'ஓசை' சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

நூல் பட்டியல்

  • செங்குருதியும் பச்சோந்தியும்

உசாத்துணை


✅Finalised Page