அருண்
From Tamil Wiki
அருண் (நாஞ்சில் கலை இளவரசன்) (பிறப்பு: மே 01, 1963) தமிழ்நாட்டின் நாடகக் கலைஞர்களுள் ஒருவர். நாடக ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
நாஞ்சில் கலை இளவரசன் என்னும் புனை பெயரை உடைய அருண், மே 01, 1963 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலையில், எஸ். வி. இன்னாசி முத்து - திருமதி. மேரி செல்வி இணையருக்குப் பிறந்தார்.
நாடக வாழ்க்கை
அருண், 'ஒரே பரிசு' என்ற நாடகத்தில் முதன்முதலாக நடித்தார். தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களில் கதாநாயகன், எதிர் நாயகன், அண்ணன், அப்பா போன்ற பாத்திரங்களில் நடித்தார்.
பங்களிப்புகள்
அருண், ஐயப்பா ஆர்ட்ஸ், காந்தி கலைமன்றம், அண்ணா மன்றம், புனித சவேரியார் கலை மன்றம் போன்ற நாடகக் குழுக்களுடன் இணைந்து செயல்பட்டார்.
நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதினார். நடித்தார்.
விருதுகள்
- நாஞ்சில் இளவரசன்
- இளம்பிறை வேந்தன்
- குமரி மாவட்டச் சிறந்த நாடகக் கதையாசிரியர் பட்டம் (1990)
உசாத்துணை
- நாடகக் களஞ்சியம் தொகுதி ஒன்று, முதன்மைப் பதிப்பாசிரியர்: பேராசிரியர், முனைவர் சி. நயினார் முகம்மது, தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர், முதல் பதிப்பு: டிசம்பர் 1994.
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 07-Feb-2025, 17:19:50 IST