under review

முனீஸ்வரநாதர்

From Tamil Wiki
Revision as of 03:13, 25 September 2023 by Tamizhkalai (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முனீஸ்வரநாதர்

முனீஸ்வரநாதர் சமண சமயத்தின் இருபதாவது தீர்த்தங்கரர். கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தார். ஜைன ராமாயணம் இவரின் காலகட்டத்தில் படைக்கப்பட்டதாக சமணர்கள் நம்புகிறார்கள். இவரது குரு மல்லிநாதர்.

புராணம்

மன்னர் சுமித்திரருக்கும், இராணி பத்மாவதிக்கும் மகனாக முனீஸ்வரநாதர் பிறந்தார். இவர் 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.

அடையாளங்கள்

  • உடல் நிறம்: கருநீலம்
  • லாஞ்சனம்: ஆமை
  • மரம்: சம்பக் (மைக்கேலியா சம்பகா) மரம்
  • உயரம்: 20 வில் (60 மீட்டர்)
  • கை: 80 கைகள்
  • முக்தியின் போது வயது: 30000 வருடங்கள்
  • முதல் உணவு: ராஜகிருஹத்தின் விருஷாபென் அளித்த கீர்
  • தலைமை சீடர்கள் (காந்தர்கள்): 18 (மல்லி)
  • யட்சன்: வருண தேவர்
  • யட்சினி: பகுரூபினி

கோயில்கள்

  • முனீஸ்வரநாதர், அரநாதர் மற்றும் மல்லிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்முக சமணக் கோயில், கர்நாடகாவின் கர்கலா கிராமத்தில் உள்ளது.
  • பாலிதானா சமணர் கோயில்கள் மற்றும் சிகார்ஜியில் முனீஸ்வரநாதரின் தனி சன்னதிகள் உள்ளன.

உசாத்துணை


✅Finalised Page