under review

மினொகொ

From Tamil Wiki
Revision as of 11:44, 12 September 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
நன்றி: Berita Harian

மினொகொ (Minokok) பழங்குடியினர் கிழக்கு மலேசியாவின் சபா மாநிலத்தில் வசிக்கின்றனர். மினொகொ பழங்குடி டூசூன் இனத்தின் ஒர் உப பிரிவாகும்.

வசிப்பிடம்

வட்டார பிரிவுகளுடன் சபா மாநிலம்

மினொகொ பழங்குடியினர் சபா மாநிலத்தின் சண்டாக்கான் பிரிவில் தொங்கொட் வட்டாரத்தில் ஆறு கிராமங்களிலும் கெனிங்காவில் நான்கு கிராமங்களிலும் வசிக்கின்றனர். அவை, சிம்பாங் எந்திபொன், சனான், லினாயுகான், மெனானாம், மலியாவ், நாமுகொன், சினாரோன், பாத்து லுங்குயான், மன்டாகாட் மற்றும் கிபாலியு.

சமய நம்பிக்கை

மினொகொ பழங்குடியினரில் முப்பத்தைந்து சதவிகித மக்கள் ப்ரோடேஸ்டன் கிறிஸ்துவத்திற்கு மதம் மாறியுள்ளனர். மற்றவர்கள் ஆன்மவாதத்தைப் பின்பற்றுபவர்களாவர்.

மொழி

மினொகொ பழங்குடியினர் டூசூன் மொழியில் பேசுவர். இந்த மொழி ஆஸ்திரோனெசிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

திருமணச் சடங்கு

மினொகொ பழங்குடிகள் தங்களுக்குள்ளே திருமணங்கள் செய்துகொள்ளமாட்டார்கள். வழக்கத்தை மீறி திருமணம் செய்யும் தம்பதியினர் ‘சொகிட்’ என்றழைக்கப்படும் தண்டம் கட்ட வேண்டும். குடும்ப வழக்கத்தை மீறி திருமணம் செய்து கொண்ட தம்பதியர்கள் சொகிட் வழக்கின் படி அவர்களுக்குப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கால்நடையை ஊர் மக்களுக்குத் தானமாகக் கொடுக்க வேண்டும்.

மினொகொ பழங்குடியில் ஒரு சகோதரப்போர் நடந்துள்ளது. இதனால், இவர்களின் மக்கள் தொகை குறைந்தது. மக்கள் தொகையைப் பெருக்க மினொகொ மூதாதையர் ‘திதாஸ்’ எனும் வழக்கத்தை உருவாக்கினர். திதாஸ் என்றால் பழைய உறவைப் புது உறவாக மாற்றிக் கொள்ளுதல். திதாஸ் செய்யப்பட்டவர்கள் தொம்பிசெஸ் எனும் புதிய இனமாக உருவாகினர். இதன் பிறகு, மினொகொ பழங்குடியினர் தொம்பிசெஸ் பழங்குடியினருடன் திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

உடை

கினொகொ பழங்குடியினரின் பாரம்பரிய உடை ‘சினுரிபான்’ என்றழைக்கப்படுகிறது. சினுரிபான் ‘திபாய்’ எனும் வெள்ளைப் பொத்தான் மற்றும் ‘கிரிங்’ எனும் சிறு மணிகள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது.

பொதுவாக, அனைத்து கடசான் டூசூன் உப பிரிவுகளும் கருப்புச் சட்டையுடன் கருப்புப் பாவாடை (குன்), கால்சட்டையை உடுத்தியிருப்பர். மினொகொ பழங்குடியினரும் அதே உடையை அணிவர். ஆனால், இவர்களை மற்ற பழங்குடி பாரம்பரிய உடையிலிருந்து நுட்பமான அலங்காரங்கள் தனித்துக் காட்டுகின்றன.

நடனம்

மினொகொ 2.jpg

கினொகொ பழங்குடியினர் நெல்லுக்கு ஆவியிருப்பதாக நம்புவர். ‘சிரிட் கரமாசான்’ என்பது நெல்லுக்குச் செய்யும் மரியாதை நடனம். சிரிட் கரமாசானில் பதினொரு பெண்கள் நடனமாடுவர். அதில் கோங் வாசிக்கும் ஆண்களைச் சொன்டொதோன் என்றழைக்கப்படுவர்.

அணிகலன்கள்

மினொகொ பெண்கள் கழுத்தில் அணியும் மணிகளாலான ஆரத்தை ‘திங்கொல்’ என்றழைப்பர். இடுப்பில் அணியும் மேகலையை ‘தாபொட், தூபொதொன்’ என்றழைப்பர். மினொகொ பழங்குடியினர் தங்க வேலைப்பாடுகளை விரும்புவதில்லை, வெள்ளிநூலில் நுண் அலங்கரிப்புகளைச் செய்வதுண்டு.

உசாத்துணை


✅Finalised Page