under review

மதுரகவி

From Tamil Wiki
Revision as of 10:44, 25 October 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மதுரகவி என்பது கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. நான்கு வகை கவிதை புனையும் புலமை வகைகளில் ஒன்று.

நான்கு வகைப் புலமை

  • ஆசுகவி
  • மதுரகவி
  • சித்திரக்கவி
  • வித்தாரகவி

இலக்கணம்

  • திவாகர நிகண்டு பகுதி 12

பொருளின் பொலிவும், சொல்லின் செல்வமும்,
தொடையும், தொடைக்கண் விகற்பமும் துதைந்து,
உருவகம் முதலா அலங்காரம் உட்கொண்டு,
ஓசை பொலிவுற்று, உணர்வோர் உளம் கட்கும்
மாகடல் அமிழ்தம் போல்பாடுதல் மதுரகவி

பொருள்

"பொருள்வளமும், சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநலன்கள் அமையப்பெற்று, உருவகம் முதலான அணி நயங்கள் பொலிந்து வர, ஓசைநயம் கொண்டதாய், கற்போருக்கு அமிழ்தம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பலவகையான இன்பங்கள் தந்து மயங்கவைக்கும் மது இது." என திவாகர நிகண்டு குறிப்பிடுகிறது.

உசாத்துணை


✅Finalised Page