under review

பூபாலபிள்ளை

From Tamil Wiki
Revision as of 09:31, 21 October 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

பூபாலபிள்ளை (வித்துவான்.ச. பூபாலபிள்ளை) (1856 - 1921) இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர். மட்டக்களப்பு அறிஞர்களின் முன்னோடி என்றழைக்கப்படுகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மட்டக்களப்பு கோட்டைக்கல்லாறில் சதாசிவபிள்ளைக்கும் வள்ளிபிள்ளைக்கும் மகனாக 1856-ல் பூபாலபிள்ளை பிறந்தார். இளமையில் கிறுத்தவ மத்திய கல்லூரியில் பயின்றார். தமிழ், ஆங்கிலத்தில் புலமை பெற்றார். போதக ஆசிரியர் ச. வைத்தியலிங்கம் பிள்ளையிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களையும், புராண இதிகாசங்களையும் கற்றார்.

பணி

கல்லூரி படிப்பிற்குப் பின் அரசாங்கத்தில் எழுதுவினைஞராகச் சேர்ந்தார். அரசாங்க கட்டட வேலைத்திணைக்களத்தில் சிறப்பியல் உயர்பதவி பெற்றார். 1915-ல் அரசாங்க வேலையிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். விருப்ப ஓய்வுக்குப்பின் முழு நேரமாக இலக்கியத்தில் ஈடுபட்டார்.

இலக்கிய வாழ்க்கை

தமிழ் இலக்கியம் மற்ரும் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டார். இவரின் சமயம் தொடர்பான் நூல்களை திருமயிலை சே.வை. ஜம்புலிங்கம் பிள்ளை 1923-ல் வெளியிட்டார். சிற்றிலக்கிய வகைகளான அகவல், அந்தாதி, எண்செய்யுள், கலிவெண்பா, தோத்திரம், புராணம், மாலை, மான்மியம் ஆகியவற்றில் பாடல் பாடினார். விக்கினேசுவரர், விநாயகர் மேல் பதிகங்கள் பல பாடினார். முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை, தமிழ் வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

மறைவு

பூபாலபிள்ளை 1921-ல் மட்டக்களப்பில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • அகவல் - அரசடி விநாயகர் அகவல் (1920)
  • அந்தாதி - மகாமாரியம்மன் அந்தாதி
  • எண்செய்யுள் - நல்லிசை நாற்பது
  • கலிவெண்பா - கணேசர் கலிவெண்பா( 1921)
  • தோத்திரம் - சிவதோத்திரம்
  • புராணம் - சீமந்தினி புராணம் (1884)
  • மாலை - சிவமாலை
  • மான்மியம் - விநாயக மான்மியம் (1905)
பதிகம்
  • கதிரேசன் பதிகம்
  • சித்திவிக்கினேசுவரர் பதிகம்
  • செல்வ விநாயகர் பதிகம்
  • திருமுருகர் பதிகம் (1882)
  • புளியநகர் ஆனைப்பந்தி விக்கினேசுவரர் பதிகம் (1905)
பிற
  • முப்பொருள் ஆராய்ச்சிக் கட்டுரை (1913)
  • தமிழ் வரலாறு

உசாத்துணை


✅Finalised Page