under review

தோழர்

From Tamil Wiki
Revision as of 10:45, 29 November 2022 by Manobharathi (talk | contribs) (→‎எழுத்து,வெளியீடு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தோழர்

தோழர் (1985) தனுஷ்கோடி ராமசாமி எழுதிய நாவல். சாத்தூர் அருகே உள்ள நென்மேனி என்னும் ஊரின் பின்னணியில் எழுதப்பட்டது. இடதுசாரி கருத்துக்களை முன்வைக்கும் படைப்பு

எழுத்து,வெளியீடு

தனுஷ்கோடி ராமசாமி 1985-ல் இந்நாவலை எழுதினார். இது அன்னம் அகரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

கதைச்சுருக்கம்

நென்மேனிக்கு அருகில் ஆசிரியராகப் பணியாற்றும் பழனி முருகன் ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டு பொதுப்பணி ஆற்றுகிறான். அருகிருக்கும் தன் சொந்த ஊரான கலிங்கல் மேட்டுப்பட்டிக்குச் சென்று சேவை செய்கிறான். தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான். பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். இருவருக்கும் அணுக்கம் உருவாகிறது. ஷபின்னாவின் குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் காட்டுகிறான்.அவனுக்கும் ஷபின்னாவின் குழுவினருக்குமான விவாதங்களே இந்நாவலின் பேசுபொருள். ஷபின்னாவின் குழு முதலாளித்துவ எண்ணங்கள் கொண்டது. ஆனால் இறுதியில் விடைபெறுகையில் ஷபின்னா பழனிமுருகனை தோழர் என அழைக்கிறாள்.

இலக்கிய இடம்

முற்போக்குப் பிரச்சாரம் ஓங்கிய எழுத்து கொண்ட நாவல் இது. நேரடியாக சமகால கட்சியரசியல் பேசப்படுகிறது.

உசாத்துணை


✅Finalised Page