under review

தெய்வ சிகாமணிக் கவிராயர்

From Tamil Wiki
Revision as of 09:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

தெய்வ சிகாமணிக் கவிராயர் (பொ.யு. 17-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சிற்றிலக்கியப்புலவர். அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் முக்கியமான படைப்பு.

பார்க்க தெய்வசிகாமணி

வாழ்க்கைக் குறிப்பு

குலசேகரப்பட்டினத்தில் (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) வேளாளர் குலத்தில் பிறந்தார். செந்தில் காத்த மூப்பனார் எனும் சிற்றரசனுக்கு நண்பர்.

இலக்கிய வாழ்க்கை

குலசேகரப்பட்டினத்திலுள்ள அறம்வளர்த்த நாயகி மேல் பிள்ளைத்தமிழ் பாடினார். தனிப்பாடல்கள் பல பாடியுள்ளார்.

அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ் பாடல்

காப்புப் பருவம்

கருவிமுகில் தவழ் பொருப்பை வலிதிற் பெயர்த்துநீள்
கடலகடு கிழியநட்டு முறையில் திருப்பவே
கடவுளர்கை விட உதித்த கடுவைத் தடக்கியே
கறைமிடற துடையகர்த்த ரெனுமற் புதத்தினார்

நூல் பட்டியல்

  • அறம்வளர்த்தநாயகி பிள்ளைத்தமிழ்

உசாத்துணை


✅Finalised Page