under review

தலைக்குறிகள் (பரதநாட்டியம்)

From Tamil Wiki
Revision as of 14:44, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Bharatham.jpg

உடலின் அசைவுகள் அல்லது நிலை பரதநாட்டியக் கலையில் குறியீட்டு ரீதியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒவ்வொரு அசைவு அல்லது நிலையும் ஒன்றை சுட்டுவன. அதில் தலைக்குறிகளும் ஒன்று. தலையின் நிலைக்கேற்ப அவை இருபத்தி நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருக்கின்றன.

தலைக்குறிகள்

தலைக்குறிகள் மற்றும் அதன் குறியீடுகள்
1 சமம் இயற்கையான சமநிலை தியானம், தோத்திரம், திருப்தி, உதாசினம்.
2 துதம் மெதுவாக தலையை ஆட்டுதல் மன மின்மை, திகைப்பு, நிராதரவு
3 விதுதம் விரைவாக தலையை ஆட்டுதல் தடிமன், சூடு, பயம், குடிவெறி
4 ஆதுதம் சற்று நிவந்து திருப்புதல் பெருமை, பக்கப்பார்வை, செருக்கு
5 அவதுதம் சற்று நிவந்து தலையைக் குனித்தல் கேள்வி, 'நில்’ எனல், அழைத்தல், பேச்சு
6 கம்பிதம் தலை உயர்த்தி அசைத்தல் அறிமுகமாதல், மனத்தாங்கல், தருக்கம், அச்சுறுத்தல், கேள்வி
7 அகம்பிதம் தலை உயர்த்தி மெதுவாக அசைத்தல் உபதேசம், விசாரம், எதாவது சொல்லல்
8 ப்ரகம்பிதம் முன்னும் பக்கத்தும் அசைத்தல் அற்புதரசம், பாட்டு, பிரபந்தம்
9 உதவாஹிதம் சட்டென்று தலை நிமிரல் பெருமை, என்னால் முடியும் என்பது
10 அஞ்சிதம் தலையைச் சிறிது பக்கச் சார்பாகத் திருப்பல் காதல், அருவருப்பு
11 நிஹஞ்சிதம் தோளையுயர்த்தித் தலைதொடல் காதலன் காட்சியின்பம், பாசாங்குச்சினம், பிலுக்கு
12 பாரவ்ருத்தம் ஒரு பக்கத்திருப்பல் பின்னால் பார்த்தல், இதைச் செய்யெனல், மனக்கசப்பு
13 உத்ஷிப்தம் அண்ணாந்து பார்த்தல்
14 அதோமுகம் தலைகுனிதல் நாணம், விசனம், வணக்கம்
15 லோலிதம் தலைசுழல் தூங்கி விழல், போதை, மயக்கம்
16 திர்யோன்னடான்னடம் மேலும் கீழும் ஆட்டல் உதாசீனம்
17 ஸ்கந்தானடம் தலையைத் தோளில் இருத்தல் சிந்தை, மயக்கம், உறக்கம், போதை
18 ஆராத்ரிகம் தலையை இருபக்கமுந் திருப்பித் தோளில் இடித்தல் வியப்பு, பிறர் அபிப்பிராயத்தை ஆராய்தல்
19 பாரிவாபிமுகம் ஒரு பக்கத்திலிருப்பவரைக் காணத் திருப்பல்
20 ஸௌம்யம் அசையாதிருத்தல் ஆட்டத் தொடக்கம்
21 ஆலோலிதம் தலையைத் தாராளமாக அசைத்தல் பூத்தரல்
22 திரச்சினம் மேலே தலை தூக்கி இரு புறமும் பார்த்தல் நாணம்
23 ஸௌந்தரியம் இடுப்பையும் வளைத்து மேலும் கீழும் பார்த்தல் காரணம், தேனீ, யோகம்
24 பரிவாஹிதம் ஒருபக்கச்சாய்வு வியப்பு, நகை, தலைவன் நினைவு

உசாத்துணை


✅Finalised Page