under review

ஞானசித்தர்

From Tamil Wiki
Revision as of 09:13, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஞானசித்தர் (பொ.யு. 19-ம் நூற்றாண்டு) தமிழ்ப்புலவர். சைவப்புலவர். சிற்றிலக்கிய வகைமைகளில் பல பாடல்களை இயற்றியுள்ளார்.

வாழ்க்கைக் குறிப்பு

திருநெல்வேலி (தற்போதைய தூத்துக்குடி மாவட்டம்) ஆழ்வார்திருநகரியில் முத்துச்சாமிப்பிள்ளைக்கும், சிதம்பர வடிவம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். திருச்செந்தூரில் கலைகளைக் கற்றார். புலவர் பூவலிங்கம்பிள்ளை இவரின் மாணவர். சுந்தர சாஸ்திரிகள் அழைத்ததன் பேரில் ஆற்றூரில் திருப்பணி செய்தார். புவனாம்பிகையை வழிபாட்டுத் தெய்வமாகக் கொண்டார். சீதாலஷ்மியை மணந்தார். இவர்களுக்கு புவனாம்பிகை என்ற பெண் குழந்தை பிறந்தது.

இலக்கிய வாழ்க்கை

மதுரை அங்கையற்கண்ணிக்கும் சோமசுந்தரப் பெருமாளுக்கும் பாமாலை பாடினார். முத்துச்சாமி முனிவருடன் சொற்போர் செய்து வென்றார். தன் அடியானாகிய மக்கமீராலெவ்வை ராவுத்தரின் பேரில் "கலை ஞானதீபம் ஆயிரம்" நூலை எழுதினார். பல சிவாலயங்களுக்குச் சென்று பதிகங்கள் பாடி அரங்கேற்றினார். திருவூர்ச் சின்னச்சாமிப் பிள்ளை ஞானச்சித்தருக்குப் புகழ் மாலையாக "ஞானசித்த புராணம்" இயற்றினார். புராணிகர் திருச்சிற்றம்பல ஞானியார் ஆசிரியப்பா பாடினார். பூவை கலியாணசுந்தரர் சந்தப்பாக்கள் இயற்றினார். கோவை, பதிகம் என பல சிற்றிலக்கிய வகைமைகளில் பாடல்களை இயற்றியுள்ளார்.

நூல் பட்டியல்

  • முருகன் திருவருடபா
  • கலைஞானம்
  • சுத்தாத்வித சித்தாந்த பூடணம்
  • மகாமூலிகா மர்மம்
  • தபோதனம்
  • அகத்தியர் அகவல்
  • ஞான பாஸ்கரோதயம் ஆயிரம்
  • செண்பகாடவி
  • சித்திரகங்கை
  • உரோமவிருக்கம்
  • மேதிவிருக்கம்
  • சாயாவிருக்கம்
  • சல்லியகரணி
  • செளபாக்கிய கரணி
  • மிருதசஞ்சீவி
  • கந்தகமடு
  • சூதக்கிணறு
  • சூரிய காந்தம்
  • சந்திரகாந்தம்
  • அயக்காந்தம்
  • கருநெல்லி
  • அகத்தியனார் அகவல்
  • வெள்ளியங்கிரி பதிகம்
  • கருவூர்ப்பதிகம்
அவரைப்பற்றிய நூலகள்
  • ஞானச்சித்த பிரபாவம்
  • திருக்கூர்ச்சித்தர் மான்மியம்
  • ஞானச்சித்த புராணம்

உசாத்துணை


✅Finalised Page