under review

சைவ இலக்கியங்கள்

From Tamil Wiki
Revision as of 09:12, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சைவ இலக்கியங்கள் (பொ.யு. ஏழாம் நூற்றாண்டு) சைவ மதத்தினைப் பரப்பவும், சைவ மத முதற்கடவுளான சிவபெருமானின் புகழ் பாடவும் எழுந்தவை. சில இலக்கியங்கள் சைவத்தின் நுண்ணிய கருத்தினையும், சித்தாந்த நெறிகளையும் வெளிப்படுத்தின.

வரலாறு

சைவ சமயம் செழித்து வளர்ந்தது பொ.யு. 7, 8, 9--ம் நூற்றாண்டுகள். இக்காலக்கட்டங்களில் சைவ நூல்கள் தோன்றின. அவற்றில் தேவாரம், திருவாசகம், திருத்தொண்டர் புராணம் மற்றும் ஏனைய திருமுறை நூல்கள் தோத்திர நூல்கள் எனப்பட்டன. சைவ சமயம் பற்றிய எண்ணங்களைத் தத்துவ நோக்கில் ஆழ்ந்து பார்த்தவை சைவ சாத்திர நூல்கள் எனப்பட்டன.

சிவபெருமானை முழு முதல் தெய்வமாகப் போற்றுவது சைவ சமயம். இச்சமயத்தில் ஈடுபட்டு சமயக் கொள்கைகளையும், பக்தி உணர்சியையும் வளர்ப்பதற்கு சிவாலயங்கள் தோரும் சென்று பக்தி ததும்பும் பாடல்களை அடியார்கள் பாடினர். இப்பாடல்களை எல்லாம் இராஜராஜனின் வேண்டுகோளுக்கிணங்க நம்பியாண்டார் நம்பி என்ற சைவப் பெரியார் பதினொரு திருமுறைகளாக வெளியிட்டார். பின்னர் சேக்கிழாரின் பெரிய புராணமும் சேர்ந்து பன்னிரு திருமுறைகள் என வழங்கப்பட்டது.

அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூன்று சிவனடியார்கள் சிவன் கோயில்களில் பாடிய பதிகங்களில் மறைந்தவை போகக் கிடைத்தவை 8000. இதன் தொடர்ச்சியாக இந்தக் காலக்கட்டத்தில் மாணிக்கவாசகர் தோன்றிப் பதிகம் பாடினார். சுந்தரமூர்த்தி நாயனாரது திருத்தொண்டத் தொகை நூலில் மாணிக்கவாசகர் பெயர் இடம்பெறவில்லை. ஆனால் மாணிக்கவாசகரின் பாடல்களில் வரகுண பாண்டியனின் பெயர் இடம் பெறுகிறது. எனவே மாணிக்கவாசகர் வரகுணபாண்டியனின் (பொ.யு 9-ம் நூற்றாண்டு) காலத்தைச் சேர்ந்தவர் எனலாம்.

சைவத் திருமுறகள்

  • தேவாரம்
  • திருவாசகம்
  • திருவிசைப்பா
  • திருப்பல்லாண்டு
  • திருமந்திரம்
  • திருமுகப் பாசுரம்
  • திருவாலங்காட்டுத் திருப்பதிகம்
  • திருவிரட்டை மணிமாலை
  • அற்புதத் திருவந்தாதி
  • சேத்திர வெண்பா
  • பொன்வண்ணத்தந்தாதி
  • திருவாரூர் மும்மணிக்கோவை
  • திருக்கைலாய ஞானஉலாகயிலைபாதி
  • காளத்திபாதி அந்தாதி
  • திருஈங்கோய்மலை எழுபது
  • திருவலஞ்சுழி மும்மணிக்கோவை
  • பெருந்தேவபாணிகோபப் பிரசாதம்
  • கார் எட்டு
  • போற்றித்திருக்கலிவெண்பா
  • திருமுருகாற்றுப்படை
  • திருக்கண்ணப்ப தேவர் திருமறம்
  • மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை
  • சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை
  • சிவபெருமான் திருஅந்தாதி
  • சிவபெருமான் மும்மணிக்கோவை
  • மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை
  • கோயில் நான்மணிமாலை
  • திருக்கழுமல மும்மணிக்கோவை
  • திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  • திருவேகம்பமுடையார் திருவந்தாதி
  • திருவொற்றியூர் ஒருபா ஒருபது
  • திருநாரையூர் விநாயகர்
  • திருஇரட்டை மணிமாலைகோயில்
  • திருப்பண்ணியர் விருத்தம்
  • திருத்தொண்டர் திருவந்தாதி
  • ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி
  • ஆளுடைய பிள்ளையார் திருச்சண்பை விருத்தம்
  • ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை
  • ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை
  • ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
  • ஆளுடைய பிள்ளையார் திருத்தொகை
  • திருநாவுக்கரசர் திருஏகாதசமாலை
  • பன்னிரண்டாம் திருமுறை

திருமுறை சார்ந்த நூல்கள்

  • பன்னிரு திருமுறை
  • திருமுறைத் தொடர்
  • திருத்தொண்டர் புராண சாரம்
  • திருப்பதிக் கோவை
  • திருப்பதிகக் கோவை
  • திருமுறை கண்ட புராணம்
  • சேக்கிழார் புராணம்
  • திருத்தொண்டர் திருநாமக்கோவை

சைவ சித்தாந்த நூல்கள்

சைவ சிந்தாந்த விளக்க நூல்கள் பதினான்கு.

  • திருவுந்தியார்
  • திருக்களிற்றுப்படியார்
  • சிவஞான போதம்
  • சிவஞான சித்தியார்
  • இருபா இருபது
  • உண்மை விளக்கம்
  • சிவப்பிரகாசம்
  • உண்மைநெறி விளக்கம்
  • திருவருட்பயன்
  • வினா வெண்பா
  • போற்றிப் பஃறொடை
  • கொடிக்கவி
  • நெஞ்சு விடு தூது
  • சங்கற்ப நிராகரணம்

வட நூல்கள்

  • தத்துவப் பிரகாசிகை
  • தத்துவ சங்கிரகம்
  • தத்துவத் திரய நிர்ணயம்
  • இரத்தினத் திரயம்
  • போக காரிகை
  • நாத காரிகை
  • மோட்ச காரிகை
  • பரமோட்ச நிராச காரிகை

மொழிபெயர்ப்பு சைவ நூல்கள்

  • சிவார்ச்சனா சந்திரிகை
  • அரிகரதாரதம்மியம்
  • பஞ்சரத்ன ஸ்லோகங்கள்
  • சுருதி ஸுக்தி மாலை
  • சிவதத்துவ விவேகம்
  • சிவபர ஸ்லோகங்கள்
  • பரப்ரம்ம தச சுலோகீ
  • ஈச்வர குரு த்யானங்கள்

தல புராணங்கள்

  • திருவிளையாடற் புராணம்
  • மதுரைக் கலம்பகம்
  • மதுரைக் கோவை
  • மதுரை மாலை
  • காஞ்சிப் புராணம்
  • கச்சி ஆனந்த ருத்ரேசர் பதிகம்
  • கச்சித் திருவேகம்பர் ஆனந்தக் களிப்பு
  • சிதம்பர மும்மணிக் கோவை
  • திருவாரூர் நான்மணி மாலை
  • சிதம்பர செய்யுட் கோவை
  • காசிக் கலம்பகம்
  • திருக்குற்றாலக் குறவஞ்சி
  • பிரபந்தத்திரட்டு
  • இரட்டைமணி மாலை

வீரசைவ நூல்கள்

  • சித்தாந்த சிகாமணி
  • பிரபுலிங்க லீலை
  • ஏசு மத நிராகரணம்
  • இட்டலிங்க அபிடேகமாலை
  • கைத்தல மாலை
  • குறுங்கழி நெடில்
  • நெடுங்கழி நெடில்
  • நிரஞ்சன மாலை
  • பழமலை அந்தாதி
  • பிக்ஷாடன நவமணி மாலை
  • சிவநாம மகிமை
  • வேதாந்த சூடாமணி
  • திருத்தொண்டர்மாலை
  • ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் ஸப்த ரத்னம்

பொது சைவ நூல்கள்

  • கந்த புராணம்
  • முத்துத்தாண்டவர் பாடல்கள்
  • நீலகண்டசிவன் பாடல்கள்
  • நடராசபத்து

பிற சைவ சித்தாந்த நூல்கள்

  • சித்தாந்த சாத்திரம்
  • சொக்கநாத வெண்பா
  • சொக்கநாத கலித்துறை
  • சிவபோக சாரம்
  • முத்தி நிச்சயம்
  • சோடசகலாப் பிராத சட்கம்

உசாத்துணை


✅Finalised Page