under review

சேரமானெந்தை

From Tamil Wiki
Revision as of 08:46, 21 May 2023 by Logamadevi (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சேரமானெந்தை சங்க காலப் புலவர். குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலை எழுதினார்.

வாழ்க்கைக் குறிப்பு

சேர மரபைச் சேர்ந்தவர். இவர் பெயர் அந்தை என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. எந்தை என்பது இவரது இயற்பெயர். சங்க காலத்தில் ’அந்தை’; ’ஆந்தை’ என்பது மக்களின் பெயர் வகையாக இருந்துள்ளது.

இலக்கிய வாழ்க்கை

குறுந்தொகையில் இருபத்தியிரண்டாவது பாடலை இவர் பாடினார். தலைவன் தன்னை விட்டுவிட்டுச் செல்லப்போவதை அறிந்த தலைவியின் துயரை தோழி தேற்றுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

பாடல் நடை

நீர்வார் கண்ணே நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே

உசாத்துணை


✅Finalised Page