செந்தமிழ்ச் செல்வி
From Tamil Wiki
செந்தமிழ்ச் செல்வி (1925) தமிழ் இலக்கிய மாத இதழ். பழந்தமிழ் ஆய்வுக்காக வெளிவருவது. திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் தொடங்கப்பட்டது.
வெளியீடு
செந்தமிழ்ச்செல்வி 1925ல் திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் தலைவர் வ.சுப்பையா பிள்ளையால் தொடங்கப்பட்டது. முதலில் திருநெல்வேலியில் இருந்தும் பின்னர் சென்னையில் இருந்தும் வெளிவந்தது. சுப்பையா பிள்ளைக்குப்பின் இரா.முத்துக்குமாரசுவாமி இவ்விதழின் ஆசிரியராக இருந்து நடத்தினார்.
உள்ளடக்கம்
தேவநேயப் பாவாணர், மதுரை இரா. இளங்குமரன், க.ப. அறவாணன், இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம், பி.எல் சாமி போன்ற புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர்கள் இவ்விதழில் எழுதிவந்துள்ளனர்.செந்தமிழ்ச்செல்வியின் பெரும்பாலான இதழ்கள் தமிழ் இணைய நூலகச் சேமிப்பில் உள்ளன (செந்தமிழ்ச் செல்வி, தமிழ் இணையநூலகம்)