under review

சி தங்காங்

From Tamil Wiki
Revision as of 08:16, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Filem si tanggang.jpg

‘சி தங்காங்’ : மலேசிய மக்களிடையே புகழ்பெற்ற மலாய் நாட்டார் கதைகளில் ஒன்று. நன்னெறிப் பண்பைச் சார்ந்த மிக புகழ்பெற்ற இக்கதை சினிமாவாகவும், நாடகமாகவும் சிறுவர் கதைகளாகவும் வெளியிடப்பட்டுள்ளது.இக்கதை 2003-ம் ஆண்டு மறுசீரமைக்கப்பட்டத் தொடக்கப்பள்ளிகளுக்கான இரண்டாம் ஆண்டு தமிழ்மொழிப் பாடப்புத்தகத்தில் இம்மலாய் நாட்டார் கதை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

தங்காங் பின்புலம்

தங்காங் கடற்கரை கிராமத்தில் பிறந்த மீனவக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்று கூறப்படுகிறது. ஒரு சாரார் கடற்கரை ஓரத்தில் வாழ்ந்த பழங்குடி இனத்தைச் சார்ந்தவன் என்றும் கூறுகின்றனர். தங்காங்கின் தந்தை சி தாலாங், தாய் சி டெருமா ஆவர். மிக வறுமையில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். சிறு வயது முதலே தான் பெருஞ்செல்வந்தராக வேண்டும் என்று தங்காங் விரும்பினான். ஒருநாள், தன் கிராம முகத்துவாரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பெரிய கப்பலில் ஏறி அதன் தலைவனைச் சந்தித்து கப்பலிலேயே வேலைக்குச் சேர்கிறான். பெரும் செல்வந்தனாகி, கப்பல் தலைவனாகி ஊர் திரும்புகிறான். பிள்ளைக்காக காத்திருந்த பெற்றோர்கள் அவனைக் காணவர அவன் அவர்களை வெறுத்தொதுக்குகிறான். அவன் தாய் தான்தான் அவன் உண்மையான தாய் எனில் அவன் கல்லாக மாற வேண்டும் எனச் சாபம் விடுகிறாள். அவனோடு கப்பல் மாலுமிகளும் கல்லாய் மாறுகின்றனர்.

பல நாடுகளில் - தங்காங் கதை

ஆசியாவில் பல நாடுகளில் இதே கதை வாய்மொழியாகச் சொல்லப்பட்டு வந்துள்ளது. இந்தோனேசியாவில் இக்கதை ‘மாலின் குண்டாங்’ என்றும், புருணை நாட்டில் ‘நகோடா மானிஸ்’ என்றும், மலேசியாவில் அது சி தங்காங் என்றும் அழைக்கப்படுகிறது. இக்கதைகளில் கதாபாத்திரம் மற்றும் இடம் மாறுப்பட்டிருந்தாலும் அதே சாரத்தையே கொண்டிருக்கிறது.

மலேசியாவில் மூவார் ஜோகூரில் அமைந்துள்ள ‘த்ரெஹ்' (Bukit Treh) என்ற இடத்தில் இது நடந்ததாகவும் வாய்மொழியாகக் கூறப்படுகிறது. தங்காங்கின் கப்பல் புயலால் தாக்கப்பட்டு மூவார் ஆற்றின் நீர்வழித் தடத்தை மறைத்து பாறையாகித் தற்போது குன்றாக மாற்றியுள்ளது என்று ஒரு சாரார் நம்புகின்றனர். வரலாற்றாசிரியர்கள், ‘த்ரெஹ்‘ என்ற சொல்லுக்குப் பொருள் கடினமான கல் என்று அர்த்தம் கூறுகின்றனர். அதுமட்டுமல்ல 'சாகாய்' (Sakai) எனும் பழங்குடியினர் தங்காங் தங்கள் சமூகத்தைச் சார்ந்தவர் என்றும் கூறுகின்றனர்.

உசாத்துணை


✅Finalised Page