under review

இளந்திரையன்

From Tamil Wiki
Revision as of 17:21, 30 September 2023 by Meenambigai (talk | contribs) (Spell Check done)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Ilanthiraiyan. ‎


இளந்திரையன் சங்க காலப் புலவர். தொண்டையர் மரபின் அரசர். பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவர் பாடிய பாடல்கள் புறநானூறு, நற்றிணை தொகுப்புகளில் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

இவர் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை மண்டலத்தை ஆட்சி புரிந்த தொண்டையார் மரபினர். இவர் பவத்திரி என்ற ஊரை உரிமை கொண்டு வடவேங்கடத்தைச் சூழ ஆட்சி செய்தார். பெரும்பாணாற்றுப்படை பாடல்கள் வழி இவருடைய முன்னோர்கள் கடல் வழியாக வந்து தொண்டை நாட்டை அடைந்து ’திரையர்’ என்று அழைக்கப்பட்டு ஆட்சி செய்ததை அறிய முடிகிறது.

இலக்கியம்

புறநானூற்றில் 185-ஆவது பாடல் இவர் பாடியது. நற்றிணையில் இவரது மூன்று பாடல்கள் (94, 99, 106) உள்ளன. கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்கு இளந்திரையன் பாட்டுடைத் தலைவன்.

பாடல் நடை

  • புறநானூறு: 185

கால்பார் கோத்து, ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்,
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின், வைகலும்,
பகைக்கூழ் அள்ளற் பட்டு, 5
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

  • நற்றிணை: 94

நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில்,
காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும்;
யானே, பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கி-
கை வல் கம்மியன் கவின் பெறக் கழாஅ
மண்ணாப் பசு முத்து ஏய்ப்ப, குவி இணர்ப்
புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல்- தோழி!- தன்வயின்
ஆர்வம் உடையர் ஆகி,
மார்பு அணங்குறுநரை அறியாதோனே!

  • நற்றிணை: 99

'நீர் அற வறந்த நிரம்பா நீள்இடை,
துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின்,
அஞ்சுவரப் பனிக்கும் வெஞ் சுரம் இறந்தோர்
தாம் வரத் தௌத்த பருவம் காண்வர
இதுவோ?' என்றிசின்- மடந்தை!- மதி இன்று,
மறந்து கடல் முகந்த கமஞ் சூல் மா மழை
பொறுத்தல்செல்லாது இறுத்த வண் பெயல்
கார் என்று அயர்ந்த உள்ளமொடு, தேர்வு இல-
பிடவமும், கொன்றையும் கோடலும்-
மடவ ஆகலின், மலர்ந்தன பலவே.

  • நற்றிணை: 106

அறிதலும் அறிதியோ- பாக!- பெருங்கடல்
எறி திரை கொழீஇய எக்கர் வெறி கொள,
ஆடு வரி அலவன் ஓடுவயின் ஆற்றாது,
அசைஇ, உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு
உயவினென் சென்று, யான், உள் நோய் உரைப்ப,
மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள், நறு மலர்
ஞாழல் அம் சினைத் தாழ்இணர் கொழுதி,
முறி திமிர்ந்து உதிர்த்த கையள்,
அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே?

உசாத்துணை


✅Finalised Page