under review

இரா. இரவி

From Tamil Wiki
Revision as of 07:24, 24 February 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Changed incorrect text: **ஆம் ஆண்டு, **இல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கவிஞர் இரா இரவி
கவிஞர் இரா. இரவி
கவிஞர் வா.மு. சேதுராமன் அவர்களுடன் இரா. இரவி
நடிகர், இயக்குநர் மௌலி மற்றும் பேராசிரியர் கு. ஞானசம்பந்தனுடன் இரா. இரவி
இறையன்ப்ய் கருவூலம் - இரா. இரவி
கவியரங்கில் இரா. இரவி

இரா. இரவி (இராமகிருஷ்ணன் இரவி) (நவம்பர் 12, 1963) கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். புதுக்கவிதை, ஹைக்கூ, லிமரிக், துளிப்பா என்று பல கவிதைகளை எழுதினார். பல கவிதை நூல்களை வெளியிட்டார். தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

இரா. இரவி, மதுரையில், நவம்பர் 12, 1963 அன்று இராமகிருஷ்ணன்-சரோஜினி இணையருக்குப் பிறந்தார். மதுரையில் மேல் நிலைக் கல்வி பயின்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல்வழியில் இளங்கலை வணிகவியல் பயின்று பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

இரா. இரவி, தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தில் 1982-ம் ஆண்டில் எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பின் பதவி உயர்வு பெற்று, உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மனைவி: ஜெயச்சித்ரா. மகன்கள்: பிரபாகரன், கௌதம்.

இலக்கிய வாழ்க்கை

இரா. இரவி ஹைக்கூ(Haiku), துளிப்பா, லிமரிக்(limeric) எனப் பல வகைக் கவிதைகளை இதழ்களிலும் இணையத்திலும் எழுதினார். ஹைக்கூ கவிதைகளுக்காகவென்றே ‘கவிமலர்’ [1] என்ற இணையதளத்தைத் தொடங்கினார். மதுரைத் தமிழ்ச் சங்கம் உள்ளிட்ட பல தமிழ்ச் சங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டு கவிதைகள் வாசித்தார். ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்தார். சாகித்ய அகாடமி வெளியிட்ட ‘தமிழ் ஹைக்கூ ஆயிரம்’ நூலில் இவரது 10 ஹைக்கூ கவிதைகள் இடம் பெற்றன.

இவரது ஹைக்கூ கவிதைகள் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை தியாகராசர் கல்லூரி, திருச்சி புனித சிலுவை பெண்கள் கல்லூரி, விருதுநகர் வன்னியப் பெருமாள் பெண்கள் கல்லூரி ஆகியவற்றின் பாடநூல்களில் இடம்பெற்றன. இவரது படைப்புகளை ஆராய்ந்து மாணவர்கள் சிலர் இளம் முனைவர் (எம்.பில்.) பட்டம் பெற்றனர். 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார். பல்வேறு பட்டிமன்றங்களில், கவியரங்குகளில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பொறுப்புகள்

  • மதுரை யாதவா கல்லூரியில், பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராகப் பணிபுரிந்தார்.
  • மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் பெண்கள் கல்லூரியில் பாடத்திட்ட தேர்வுக்குழு உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • சுற்றுலாத் துறை சார்ந்த நிகழ்வுகளிலும் விழாக்களிலும், கருத்தரங்குகளிலும் தொகுப்பாளராகப் பணிபுரிந்தார்.
  • தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலராகப் பணியாற்றினார்.

விருதுகள்

  • 1992-ல், குடியரசு நாள் விழாவில் மாவட்ட ஆட்சியரிடமிருந்து சிறந்த அரசுப்பணியாளர் விருது.
  • மதுரை நகைச்சுவை மன்றம் வழங்கிய ‘வளரும் கலைஞர்’ விருது.
  • ‘கவிதை உறவு’ மாநில அளவில் நடத்திய சிறந்த நூல்களுக்கான போட்டியில் ‘கவியமுதம்’ நூலிற்கு இரண்டாம் பரிசு.
  • கன்னிமாரா நூலக வாசகர் வட்டமும் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கமும் நடத்திய ஹைக்கூ நூல் போட்டியில் ‘ஹைக்கூ உலா’ நூலுக்கு மதிப்புறு பரிசு.
  • புதுவை எழுத்தாளர் சங்கம் வழங்கிய சிறந்த நூலுக்கான பரிசு- ‘ஹைக்கூ கவிதைகள்’ நூலுக்கு.
  • மதுரையில் கணினித்தமிழ்ச் சங்கம் நடத்திய ‘கணிப்பொறித் திருவிழா'வில் ‘தமிழும் அறிவியலும்’ என்ற தலைப்பில்லான கவிதைப் போட்டியில் பரிசு.
  • லண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலகளாவிய முறையில் நடத்திய கவிதைப் போட்டியில்இருமுறை பரிசு.
  • அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகம் அளித்த மதிப்புறு முனைவர் பட்டம்
  • தமிழக அரசின் பாரதி விருது
  • விமர்சன வித்தகர் விருது
  • துளிப்பாச் சுடர் விருது
  • கலைமாமணி விக்கிரமன் விருது
  • எழுத்தோலை விருது
  • ஹைக்கூ திலகம்
  • ஹைக்கூச் செம்மல்
  • கவியருவி
  • கவிமுரசு

இலக்கிய இடம்

படிமம் சார்ந்து பல கவிதைகளை எழுதினார் இரா. இரவி. உவமை, உருவகம், முரண், தொன்மம் என்று பல்வேறு வகைமைகளைத் தனது கவிதைகளில் பயன்படுத்தினார். இரவியின் கவிதைகளில் காணப்படும் வெளிப்பாட்டு உத்திகள் அவரது கவிதைகளுக்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதாய் அமைந்தன. இரவியின் கவிதைகளை ‘உணர்வு இலக்கியம்' என்று பேராசிரியர் முனைவர் இரா. மோகன் குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் இரா. இரவி நூல்கள்
கவிஞர் இரா. இரவி புத்தகங்கள்

நூல்கள்

  • கவிதைச் சாரல்
  • ஹைக்கூ கவிதைகள்
  • விழிகளில் ஹைக்கூ
  • உள்ளத்தில் ஹைக்கூ
  • என்னவள்
  • நெஞ்சத்தில் ஹைக்கூ
  • கவிதை அல்ல விதை
  • இதயத்தில் ஹைக்கூ
  • மனதில் ஹைக்கூ
  • ஹைக்கூ ஆற்றுப்படை
  • சுட்டும் விழி
  • ஆயிரம் ஹைக்கூ
  • புத்தகம் போற்றுதும்
  • கவியமுதம்
  • ஹைக்கூ முதற்றே உலகு
  • வெளிச்ச விதைகள்
  • ஹைக்கூ உலா
  • கவிச்சுவை
  • ஹைக்கூ 500
  • இறையன்பு கருவூலம்
  • இலக்கிய இணையர் படைப்புலகம்
  • ஏர்வாடியார் கருவூலம்
  • தீண்டாதே தீயவை
  • இளங்குமரனார் களஞ்சியம்
  • அம்மா அப்பா
  • உதிராப் பூக்கள் (இரா. இரவியின் தேர்ந்தெடுத்த நூறு ஹைக்கூக்கள்)
  • தமிழிலிருந்து இந்தி ஹைக்கூ (இரா. இரவியின் தேர்ந்தெடுத்த ஹைக்கூக்கள் ஹிந்தி மொழிபெயர்ப்பு)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page