Tamil Wiki:English review Checklist

From Tamil Wiki
Revision as of 14:43, 2 August 2023 by Madhusaml (talk | contribs)

Please check these before sending the article for review

Title

  • Titles should follow this convention:
    • INITIAL-DOT-SPACE-NAME or INITIAL-DOT-NOSPACE-INITIAL-DOT-SPACE-NAME
    • Eg.: R. Shanmugasundaram, T.S. Duraisamy
  • As much as possible, avoid quotation marks in the title

Section Headings

The Table-of-contents is automatically generated by the Mediawiki software. It should not be typed up by hand.

Where the ToC is not automatically being generated, please contact the admins. They will add the necessary content tags to generate the ToC

Links

Internal links within wiki
  • All associated articles present in the wiki should be hyperlinked through internal wiki links.
    • It is not necessary to provide internal link for every occurence of the word
    • The internal link should be created for the first occurence of the word (excluding the first paragraph), and subsequently after a few paragraphs. The reader should not be forced to search for internal links
    • Any incorrect or non-existent internal links will be shown in red colour. Please check these.
External links
  • This Wiki follows
  • Only the most மிக முக்கியமான வெளிச்சுட்டிகள் மட்டும் citation/மேற்கோளாக/சுட்டிகளாக தரப்படவேண்டும்
  • வெளிச்சுட்டிகள் உசாத்துணைகள் மூலமாகவே தரப்படவேண்டும்
  • வரிகளில் சொற்களுக்கு வெளிச்சுட்டிகளை (inline links) தருவதை தவிர்க்கவும். சராசரி வலைப்பதிவுகளைப் போல பயன்படுத்தக்கூடாது

பகுதி வரிசை

பட்டியல்கள்

  • பொதுவான பட்டியல்களில் புல்லட் எண்கள் இருக்கக்கூடாது. எண்கள்-அல்லாத வட்டப்புள்ளி புல்லட்களே பயன்படுத்த வேண்டும்.
    • நூல்பட்டியல், விருதுப்பட்டியல், உசாத்துணைகளில் எண் புல்லட்கள் இடப்படக்கூடாது
    • ஒன்றாவது, இரண்டாவது என்று குறிப்பிட்டு வரிசையில் சொல்லவேண்டியவற்றுக்கே எண் புல்லட்டுகள் வேண்டும். இந்த வரிசை மிக இன்றியமையாத இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்
    • பட்டியல்களில் புல்லட் எண்கள் இருந்தால் அவற்றை கையால் தட்டச்சு செய்யக்கூடாது. விக்கியின் புல்லட்டுகளையே பயன்படுத்தவேண்டும்

எழுத்தமைப்புகள்

  • Bold எழுத்துவடிவம் தவிர்க்கப்படவேண்டும்
  • குறிப்பிடப்படும் பெயர்கள் (ஆளுமை, நூல்) ஆகியவை italics சாய்வெழுத்துக்களில் இருக்கவேண்டும். அல்லது single quotesல் இருக்கலாம்
  • எண்களும் எழுத்தும் ஒரு சொல்லாக அமையும் இடத்தில் ’–’ சேர்க்கலாம். உதாரணமாக ’1999-க்கு பின்’என்பதில் ’1999-க்கு’ என்பது ஒரு சொல்லாக உள்ளது. ஆகவே ‘-’ சேர்க்கிறோம். ‘1999 முதல் 2000 வரை’ என்பதில் வருடமும் அடுத்துவரும் சொல்லும் சேர்த்து ஒரு சொல் அல்ல. ஆகவே ‘-’ வேண்டியதில்லை

தேதிகள்

  • தேதிகள் டிசம்பர் 19, 2000 என்னும் பாணியில் அமையவேண்டும். தமிழில் மாதங்களைச் சொல்வது கூடாது.
  • மாதம் நாள், வருடம் (ஏப்ரல் 10, 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்
  • வருடம், மாதம் மட்டும் இருப்பின் – ’மாதம் வருடம்’ (ஏப்ரல் 2022) என இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
  • பிறப்பு இறப்பு தேதிகள் கட்டாயமாக குறிப்பிடப்படவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை கட்டுரையின் முதல் பத்தியில், பெயருக்கு பின், அடைப்புக்குள் இருக்கவேண்டும்
  • பிறப்பு தேதி மற்றும் இறந்த தேதி ஆகியவை பிறப்பு மற்றும் இறப்பு பகுதிகளில் மீண்டும் குறிப்பிடப்படவேண்டும்
  • ஆங்கில மாதங்களை தமிழில் எழுதும் போது கீழ்க்கண்ட பிழைகள் நிகழும் அவற்றை திருத்தவும்
    • சனவரி என்பது தவறு – ஜனவரி என்பது சரி
    • மார்ச்சு என்பது தவறு – மார்ச் என்பது சரி
    • பெப்ரவரி – பிப்ரவரி என்பது சரி

காலம்

  • தற்போது போன்ற சொற்கள் தேவையில்லை. ஏனென்றால் இது நிரந்தரமான பதிவு.
  • எவருடைய தற்கால வயதும் சொல்லப்படலாகாது
  • ஒரு 10 ஆண்டு கணக்கை குறிக்க, பேச்சுவழக்கில் 50-களில் என சொல்வோம். இது குழப்பத்தை ஏற்படுத்தும். இதை 1950-களில் என்றே குறிப்பிடவும்
  • வரலாறு சார்ந்த கட்டுரைகளில் காலத்தைக் குறிக்க
    • கிருஸ்துவிற்கு முன் என்பதை – பொ.மு. (பொது ஆண்டுக்கு முன்)
    • கிருஸ்துவிற்கு பின் என்பதை – பொ.யு. (பொது யுகம்)

வாழ்க்கைக் குறிப்பு

  • வாழ்க்கைக் குறிப்பு என்பது தான் பகுதித் தலைப்பு. அதன் உபதலைப்புகளாக பிறப்பு, இளமை, குடும்பம் ஆகியவை இருக்கவேண்டும்
  • பிறப்பு பகுதியில் பெற்றோர் பெயர், பிறந்த வருடம் ஆகியவை கட்டாயம் இடம்பெறவேண்டும்
  • குடும்பம் பகுதியில் ஆளுமைக்கு தக்கபடி இணையர் பெயர்கள், திருமணமான ஆண்டு, குழந்தைகள் பெயர்கள் இருக்கவேண்டும்
  • தனிவாழ்க்கை (personal life) என்ற பகுதி தனியாக தேவையில்லை. வாழ்க்கைக் குறிப்பில் அடங்கிவிடும்

சரிபார்க்கவேண்டியவை

  • எழுத்துபிழைகள், சொற்பிழைகள், ஒற்றுப்பிழைகள் சரிபார்க்கப்படவேண்டும்
  • ஆண்-பெண் விகுதிகள் சரியாக இருக்கவேண்டும்
  • வரிகள் இருமுறை தட்டச்சிடப்பட்டிருக்கலாம், இவற்றை சரிபார்த்து களையவும்
  • குறிப்புக்களில் சொல்லபட்டுள்ள எண்களும் பட்டியல் எண்களும் ஒத்துப்போகவேண்டும்
  • வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுபவற்றில் Nowiki போன்ற டேக்குகள் இருக்கலாம். இவை Visual Editorல் தென்படாது.
    • பொதுவாக இக்கலைக்களஞ்சியத்தில் காப்பி-பேஸ்ட் தவிர்க்கப்படவேண்டும். நீளமான பட்டியல்களை மட்டும் காப்பி செய்யலாம்
    • வெளி இணையதளங்களிலிருந்து காப்பி-பேஸ்ட் செய்யப்படுவதை முதலில் நோட்பேட் போன்றவற்றில் போட்டு தேவையற்ற Nowiki அமைப்புக்களை களையவேண்டும். பின்னரே விக்கியில் இடவேண்டும்

தவிர்க்கவேண்டிய சொற்கள்

  • நாம், நமக்கு போன்ற தன்மைச் சொற்கள் இருக்கக்கூடாது
  • என்று கூறலாம் என்பதுபோன்ற தோராயமான சொற்றொடர்கள் கூடாது
  • இவரது, அவருடைய, அன்னாருடைய போன்ற சொற்கள் கூடுமானவரை தவிர்க்கப்படவேண்டும். திரும்பத்திரும்ப அந்த நூல் அல்லது ஆசிரியர் பெயரே பயன்படுத்தப்படவேண்டும்
  • திரு, திருமதி போன்ற மரியாதைத் தலைப்புகளை பயன்படுத்தக்கூடாது
  • அவர்கள், அவர்களை போன்ற மரியாதைச் சொற்களை பயன்படுத்தக்கூடாது
  • புதினம், திங்கள், அகவை போன்ற தனித்தமிழ் சொற்கள் வேண்டாம். நாவல், மாதம், வயது போன்றவை போதும்.

மொழி

  • முத்திரை பதித்தார், சாதனை புரிந்தார் போன்ற மிகைச்சொல்லாட்சிகள், க்ளீஷேக்கள் இருக்கக்கூடாது
  • ஏதேனும் ஒரு தகவல் இல்லாத சம்பிரதாயமான வரி இருக்கலாகாது
  • இவருக்கு தேசப்பற்று மிகுதி, இவர் மிகக்கடுமையான உழைப்பாளி போன்ற வரிகள்.
  • மிகையான கிளெயிம் இருக்கக்கூடாது. தமிழிலக்கியத்தின் தலைசிறந்த, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத போன்ற வரிகள்
  • விமர்சனம் என ஏதும் இருக்கக்கூடாது. இவர் நாலாந்தர வணிக இலக்கியங்களையே எழுதினார், இவருடைய படைப்புகள் வெறும் பரபரப்பு கொண்டவை போன்ற வரிகள் தேவையில்லை. நாம் வகுத்துக்கூறவே முற்படவேண்டும்.

மேலே சொன்ன கருத்தையே இவர் பொழுதுபோக்கு படைப்புகளை எழுதியவர், பொதுவாசிப்புக்குரிய நூல்களை எழுதியவர் என வரையறை செய்யலாம். எதிர்மறை தன்மை கலைக்களஞ்சியங்களுக்கு இருக்கலாகாது

முதல் பத்தி

மேற்கோள்கள், விருதுகள், பட்டங்கள், பாராட்டுகள்