Help:உதவி முகப்பு

From Tamil Wiki

இந்தப் பக்கத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு புதிய பதிவுகளை சேர்க்கலாம், வசதியாக இருக்கும்.

புதிய பக்கத்தின் ஆரம்ப வரிகள் இந்தப் பக்கத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும். மூன்று வாக்கியங்களாவது இருக்க வேண்டும். பத்து வாக்கியங்களுக்குள்ளும், ஒன்று அல்லது இரண்டு பாராக்களுக்குள்ளும் இருப்பது நல்லது, அதற்கு மேல் இருந்தால் படிப்பவர் கவனம் சிதறக்கூடும். செறிவான, நீளமான பதிவுகளுக்கு இன்னும் பல வாக்கியங்களும் பாராக்களும் தேவைப்படலாம், அதை முதல் பகுதியில் எழுதுவது நல்லது. இது பரிந்துரை மட்டுமே; சமயத்தில் இதை மீற அவசியம் ஏற்படலாம். பக்கத்தைப் பொறுத்து உங்கள் முடிவை எடுங்கள்.

பகுதி பிரித்தல்

  • சுருக்கத்துக்கு அடுத்தபடி உங்கள் பக்கத்தை பகுதிகளாக பிரிந்துக் கொண்டு எழுதுங்கள். முதல் பகுதி சுருக்கதை விவரிக்க வேண்டும். இரண்டு பாராக்களாவது குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இரண்டு பாரா கூட விளக்கம் பகுதியில் எழுத முடியவில்ல என்றால் இந்தப் பதிவு தேவைதானா என்று யோசித்துக் கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக ஒரு நாவல் பற்றிய பதிவு என்றால் அதன் பதிப்பு வரலாறு, இலக்கிய முக்கியத்துவம், தமிழ் இலக்கியத்தின் அதன் இடம், அது ஏற்படுத்திய குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்பு ஆகியவற்றை இங்கே விவரிக்கலாம். இவற்றையே தனித்தனி பகுதிகளாகவும் எழுதலாம்.
  • முடிந்த வரை விளக்கப் பகுதியில் ஒரு படத்தை இணையுங்கள். படங்களுக்கும் காப்புரிமை உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
  • எப்போதும் கடைசிப் பகுதி இணைப்புகள்/தொடர்புடைய சுட்டிகள் ஆகியவற்றைத் தர வேண்டும்.
  • பிற பகுதிகளை ஒவ்வொன்றாக எழுதுங்கள்.
  • எடுத்துக்காட்டாக ஒரு நாவல் பற்றிய பதிவு என்றால்; விளக்கம், நாவலாசிரியர் பற்றிய பகுதி என்று இரண்டு பகுதிகளாது இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் பற்றிய பதிவு என்றால்; விளக்கம், தனி வாழ்க்கை என்று இரண்டு பகுதிகளாவது இருக்க வேண்டும். அவர் அவரது படைப்புகளின் பட்டியல், பெற்ற விருதுகள் போன்றவற்றை பகுதிகளாக சேர்க்கலாம்.
  • உதாரணப் பதிவாக சுந்தர ராமசாமி பற்றிய பதிவை வைத்துக் கொள்ளலாம்.