Help:உதவி முகப்பு: Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
(No difference)

Revision as of 17:13, 16 January 2022

இந்தப் பக்கத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு புதிய பதிவுகளை சேர்க்கலாம், வசதியாக இருக்கும்.

புதிய பக்கத்தின் ஆரம்ப வரிகள் இந்தப் பக்கத்தை சுருக்கமாக விவரிக்க வேண்டும். மூன்று வாக்கியங்களாவது இருக்க வேண்டும். பத்து வாக்கியங்களுக்குள்ளும், ஒன்று அல்லது இரண்டு பாராக்களுக்குள்ளும் இருப்பது நல்லது, அதற்கு மேல் இருந்தால் படிப்பவர் கவனம் சிதறக்கூடும். செறிவான, நீளமான பதிவுகளுக்கு இன்னும் பல வாக்கியங்களும் பாராக்களும் தேவைப்படலாம், அதை முதல் பகுதியில் எழுதுவது நல்லது. இது பரிந்துரை மட்டுமே; சமயத்தில் இதை மீற அவசியம் ஏற்படலாம். பக்கத்தைப் பொறுத்து உங்கள் முடிவை எடுங்கள்.

விளக்கம்

இது ஒரு மாதிரி பக்கம் மட்டுமே. இதை நீங்கள் உங்கள் புதிய பக்கமாக கட்-பேஸ்ட் செய்து கொண்டு பகுதிகளை சேர்க்கலாம். அதாவது இந்தப் பகுதியின் பேரை "விளக்கம்" என்பதிலிருந்து உங்கள் வசதிப்படி மாற்றிக் கொள்ளுங்கள். இதன் உள்ளடக்கத்தையும் அதே போல மாற்றிக் கொள்ளுங்கள்.

சுருக்கத்துக்கு அடுத்தபடி உங்கள் பக்கத்தை பகுதிகளாக பிரிந்துக் கொண்டு எழுதுங்கள். இந்த முதல் பகுதி சுருக்கதை விவரிக்க வேண்டும். இரண்டு பாராக்களாவது குறைந்த பட்சம் இருக்க வேண்டும். இரண்டு பாரா கூட விளக்கம் பகுதியில் எழுத முடியவில்ல என்றால் இந்தப் பதிவு தேவைதானா என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒரு நாவல் பற்றிய பதிவு என்றால் அதன் பதிப்பு வரலாறு, இலக்கிய முக்கியத்துவம், தமிழ் இலக்கியத்தின் அதன் இடம், அது ஏற்படுத்திய குறுகிய மற்றும் நீண்ட கால பாதிப்பு ஆகியவற்றை இங்கே விவரிக்கலாம். இவற்றையே தனித்தனி பகுதிகளாகவும் எழுதலாம்.

முடிந்த வரை இந்தப் பகுதியில் ஒரு படத்தை இணையுங்கள். படங்கள் படிப்பதை சுலபமாக்குகின்றன. படங்களுக்கும் காப்புரிமை உண்டு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இணைக்கப்படும் படம் எப்போதும் வலது பக்கம் இருக்கட்டும். படங்களை இணைக்க இடது பக்கம் உள்ள "Upload file" என்ற பட்டனை அழுத்தி படத்தை வலையேற்றுங்கள். உங்கள் படத்தின் பெயர் example.jpg என்று வைத்துக் கொண்டால், அதை வலது பக்கம் இணைக்க இந்த விகி கட்டளையை பயன்படுத்த வேண்டும்.

[[File:example.jpg|right]]

பிற பகுதிகளை ஒவ்வொன்றாக எழுதுங்கள். எடுத்துக்காட்டாக ஒரு நாவல் பற்றிய பதிவு என்றால்; விளக்கம், நாவலாசிரியர் பற்றிய பகுதி என்று இரண்டு பகுதிகளாது இருக்க வேண்டும். ஒரு எழுத்தாளர் பற்றிய பதிவு என்றால்; விளக்கம், தனி வாழ்க்கை என்று இரண்டு பகுதிகளாவது இருக்க வேண்டும். அவர் அவரது படைப்புகளின் பட்டியல், பெற்ற விருதுகள் போன்றவற்றை பகுதிகளாக சேர்க்கலாம்.

எப்போதும் கடைசிப் பகுதி இணைப்புகள்/தொடர்புடைய சுட்டிகள் ஆகியவற்றைத் தர வேண்டும்.

உதாரணப் பதிவாக சுந்தர ராமசாமி பற்றிய பதிவை வைத்துக் கொள்ளலாம்.

உள்ளடக்கம் பற்றிய வழிநடத்தல்கள்

இதை ஜெயமோகனோ மற்ற மட்டுறுத்தல் குழு உறுப்பினர்களோதான் எழுத வேண்டும்.

பொது

  • தலைப்பை வைத்துவிட்டீர்கள் என்றால் அதை மாற்றுவது எளிதல்ல. அதனால் தலைப்பை யோசித்து வைங்கள். பயனர் எந்தப் பேரை பயன்படுத்துவார் என்று நினைத்துப் பார்த்து வையுங்கள்.
  • முடிந்த வரை நீங்கள் குறிப்பிடும் பேர்களுக்கு சுட்டி கொடுங்கள். தஞ்சாவூர் என்று குறிப்பிட்டால் சுட்டி தேவையில்லைதான், ஆனால் தஞ்சை பிரகாஷை குறிப்பிட்டால் அவர் பேரில் சுட்டியை (hyperlink) இணையுங்கள்.
  • இணையத்தில் கிடைக்கும் pdf, பிற கோப்புகளை இங்கே வலையேற்றாதீர்கள், மாறாக சுட்டி கொடுங்கள்.
  • நீங்கள் ஒரு நாவலையோ, சிறுகதையையோ குறிப்பிட்டால் அதன் மின்னூல் தமிழ் இணைய நூலகத்திலோ, ஆர்க்கைவ் தளத்திலோ, அழியாச்சுடர்கள்/ப்ராஜெக்ட் மதுரை தளத்திலோ கிடைக்கிறதா என்று பார்த்து அதற்கு சுட்டி கொடுங்கள்.

விக்கி கட்டளைகள் (markup instructions)

நான் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகள் இவை. நண்பர்கள் பிறவற்றை சேர்க்கலாம்.


  • தோட்டா கருத்துகளாக (bullet points) எழுத வரியின் முதல் எழுத்து "*" ஆக இருக்க வேண்டும். எடுத்துக்காட்டாக
* முதல் கருத்து

என்று எழுதுவது

  • முதல் கருத்து

என்ற ஒரு தோட்டா கருத்தை உருவாக்கும்.


  • மேற்கோள் காட்ட வரியின் முதல் எழுத்து " " ஆக இருக்க வேண்டும். அதாவது வெற்றிடம். " இது ஒரு மேற்கோள்" என்று நீங்கள் ஆரம்பித்தால் அது கீழே உள்ள மேற்கோளை உருவாக்கும்.
இது ஒரு மேற்கோள்

  • சுட்டியை இணைக்க: [https://www.google.com கூகிள்] என்ற கட்டளை கீழே உள்ள சுட்டியை உருவாக்கும்.
கூகிள்


இணைப்புகள்:

  • மேலும் பல விக்கி கட்டளைகள் இங்கே.