being created

96 தத்துவங்கள்

From Tamil Wiki
Revision as of 21:05, 19 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added; Table Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

மனித உடலில் 96 தத்துவங்கள் செயல்படுகின்றன. இது பற்றி யோக நூல்கள் விரிவாக விளக்கியுள்ளன. திருமந்திரத்திலும் மானுட உடலில் செயல்படும் 96 தத்துவங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

96 தத்துவ விளக்கம்

பூதங்கள் 5
பொறிகள் 5
புலன்கள் 5
கன்மேந்திரியங்கள் 5
ஞானேந்திரியங்கள் 5
கரணங்கள் 4
அறிவு 1
நாடிகள் 10
வாயுக்கள் 10
ஆசயங்கள் 5
கோசங்கள் 5
ஆதாரங்கள் 6
மண்டலங்கள் 3
மலங்கள் 3
தோஷங்கள் 3
ஈசனைகள் 3
குணங்கள் 3
வினைகள் 2
விவகாரம் 8
அவத்தை 5
மொத்தத் தத்துவங்கள் 96

திருமந்திரத்தில் 96 தத்துவ விளக்கம்

முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்

செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர்

செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின்

ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே

- என்று திருமந்திரம் கூறுகிறது. ‘முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும்' என்பதன் படி 30 + 30 + 36 = 96 தத்துவங்கள் உடலில் செயல்படுகின்றன என்றும், உடல் சிதைந்தபின் உடலை விட்டு வெளியேறிவிடுகின்றன என்றும் திருமந்திரம் கூறுகிறது.

தத்துவங்களின் உட்பிரிவுகள்

இந்த 96 தத்துவங்களில் 36 தத்துவங்கள் உட்கருவிகளாகவும், 60 தத்துவங்கள் புறக்கருவிகளாகவும் அமைந்துள்ளன.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.