ஹென்றி கிரிஸ்ப்

From Tamil Wiki
Revision as of 08:37, 2 March 2022 by Jeyamohan (talk | contribs) (Created page with "ஹென்றி கிரிஸ்ப் ( ) ( Henry Crisp )தமிழகத்தில் மக்கள்பணி ஆற்றிய லண்டன்மிஷன் மதப்பரப்புநர். சேலம் நகரில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு அரும்பணி ஆற்றியவர். == பிறப்பு, கல்வி == ஹென்றி கிரி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

ஹென்றி கிரிஸ்ப் ( ) ( Henry Crisp )தமிழகத்தில் மக்கள்பணி ஆற்றிய லண்டன்மிஷன் மதப்பரப்புநர். சேலம் நகரில் கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கு அரும்பணி ஆற்றியவர்.

பிறப்பு, கல்வி

ஹென்றி கிரிஸ்ப் 14 ஜூலை 1803 ல் இங்கிலாந்தில் ஹெர்ட்ஃபோர்ட் Hertfotd என்னும் ஊரில் பிறந்தார். ஹோக்ஸ்டன் Hoxton மிஷன் கல்லூரியில் பட்டம்பெற்றார்.

தனிவாழ்க்கை

ஹென்றி கிரிஸ்ப் எலிஸா ஸ்டெஃபி(Eliza Steffe)யை மணந்தார். 20 மார்ச் 1827ல் நார்விச் Norwich நகரில் குருப்பட்டம் பெற்றார்

மதப்பணிகள், கல்விப்பணிகள்

ஆந்திரமாநிலம் கடப்பாவில் மதகுருவாக நியமனம் பெர்று ஏப்ரல் மாதம்l 1827 கிளம்பி 17 ஜூலை 1827 ல் சென்னை வந்தார். கடப்பாவில் சிலகாலம் பணியாற்றியபின் தமிழகத்தில் சேலம் நகருக்கு அனுப்பப்பட்டார். சேலம் நகரின் முதல் கிறிஸ்தவ மதப்பணியாளர் கிரிஸ்ப்தான். சேலத்தின் முதல் ஆங்கிலக் கல்விநிலையத்தை கட்டினார். முதல் ஆங்கில மருத்துவமனையையும் அமைத்தார்.

ஆனால் நான்காண்டுகளே கிரிஸ்ப் பணியாற்ற முடிந்தது. சேலம் நகரில் அன்று தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்த தொற்றுநோய்களால் அவரும் பாதிக்கப்பட்டார். பெரும்பாலான நோயாளிகள் அவருடைய திருச்சபை வளாகத்துக்குள் மருத்துவம் பார்க்க வந்தமையால் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 7 மே 1829ல் அவர் மனனைவி எலிசா மறைந்தார். அடுத்த ஆண்டு கிரிஸ்ப் மறைந்தார்

மறைவு

கிரிஸ்ப் 28 அக்டோபர் 1831 ல் மறைந்தார்

உசாத்துணை

ஹென்றி கிரிஸ்ப்/