being created

ஹிமானா சையத்

From Tamil Wiki
Revision as of 23:58, 29 August 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added; Image Added:)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
எழுத்தாளர், டாக்டர் ஹிமானா சையத்

ஹிமானா சையத் (அ. சையத் இப்ராஹிம்) (ஜனவரி 20, 1947 - பிப்ரவரி 21, 2022) எழுத்தாளர், கவிஞர், இதழாளர், பதிப்பாளர். மருத்துவராகப் பணியாற்றினார். தமிழகத்திலும் சிங்கப்பூரிலும் வசித்தார். பொதுவாசிப்புக்குரிய சிறுகதைகளை, நாவல்களை, மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளை எழுதினார். தமிழ் மாமணி உள்ளிட்ட பட்டங்களும், விருதுகளும் பெற்றார்.

பிறப்பு, கல்வி

ஹிமானா சையத், ரா­ம­நா­த­புரம் மாவட்­டத்தில் உள்ள சித்தார்கோட்டையில், ஜனவரி 20, 1947 அன்று, மல்­லாரி அப்துல் கனி மரைக்­காயர்-உம்மு ஹபீபா தம்­ப­தி­யி­னருக்குப் பிறந்தார். தேவகோட்டையில் உள்ள டி பிரிட்டோ பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். கல்லூரிப் படிப்பை சென்னை லயோலா கல்லூரில் படித்தார். மதுரை மருத்துவக் கல்லூரியில் பயின்று எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

ஹிமானா சையத், தனது சொந்தக் கிராமமான சித்தார்கோட்டையில் மருத்துவராகப் பணியாற்றினார். பயோனியர் பிஸியோதெரபி கல்லூரியில் பகுதி நேரப் பேராசிரியராகப் பணியாற்றினார். குடும்ப நல ஆலோசகராகச் செயல்பட்டார். சிங்கப்பூர் வசந்தம் சென்ட்ரல் தொலைக்காட்சித் தொடரில் வசன எழுத்தாளராகப் பணிபுரிந்தார். மனைவி: ஹிமனாபர். இவர்களுக்கு, அப்துல்கனி, உம்மு ஷமீம், வாஸிம்கான் என மூன்று பிள்ளைகள்.

இலக்கிய வாழ்க்கை

ஹிமானா சையத், ஜெயகாந்தன், மு. வரதராசன், நாரண துரைக்கண்ணன் ஆகியோரது எழுத்த்துக்களை வாசித்து இலக்கிய ஆர்வம் பெற்றார். ஹிமானா சையத்தின் முதல் கவிதை, 1964-ல் மறுமலர்ச்சி இதழில் வெளியானது. தொடக்கத்தில் சையத் மல்லாரி, மல்லாரி சையத் என்ற பெயரில் எழுதினார். திருமணத்திற்குப் பின், மனைவியின்  பெயரையே தனது புனை பெயராகக் கொண்டு எழுதினார். முதல் சிறுகதை, ‘தாயே உனக்கு எத்தனை முகங்கள்?’, 1987-ல், மலர்மதி மாத இதழில் வெளிவந்தது. தொடர்ந்து இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூரிலிருந்து வெளியாகும்  பல இலக்கியச் சிற்றிதழ்களில் எழுதினார். தின­கரன், விடி­வெள்ளி, நவ­மணி போன்ற இலங்கை இதழ்களிலும், ஆனந்த விகடன், குங்குமம், கலைமகள், சமரசம், தினத்தந்தி, மணிவிளக்கு, ராணி, முஸ்லிம் முரசு போன்ற பல இதழ்களிலும் ஹிமானா சையத்தின் பல படைப்புகள் வெளியாகின.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.