under review

ஹாங் துவா: Difference between revisions

From Tamil Wiki
(Removed non-breaking space character)
m (Spell Check done)
 
Line 1: Line 1:
[[File:Hang Tuah, Muzium Negara - cropped.jpg|thumb]]

ஹாங் துவா: மலேசிய தொன்மங்களில் புகழப்படும் வீரர். ஹாங் துவா ஒரு துணிச்சலான, அரச விசுவாசம் கொண்ட வீரனாகக் கருதப்படுகிறார். தன் வீரத்தாலும், மதிநுட்பத்தாலும், மலாக்கா அரசுக்கும் அரணாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

==ஆரம்பக் கால வாழ்க்கை==
==ஆரம்ப கால வாழ்க்கை==
வரலாற்று பதிவுகளின்படி, அவர் சுமார் 1444 -ல் மலாக்காவில் உள்ள சுங்கை டுயோங் (Kampung Duyong) எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஹாங் மஹ்மூட் (Hang Mahmud) அவரது தாயார் டாங் மெர்டு வாத்தி (Dang Merdu Wati). அவரது தந்தையும் ஒரு காலத்தில் அரண்மனையின் நம்பகமான முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ஹாங் துவா ‘சீலாட்’ எனப்படும் தற்காப்புக் கலையில் கைத்தேர்ந்தவர். அவரும் அவரது 4 சகாக்களாக இருந்த ஹாங் ஜெபாத், ஹாங் கஸ்தூரி, ஹாங் லெகிர் மற்றும் ஹாங் லெகியு லேடாங் மலைக்குச் சென்று அடி புத்ரா (Adiputra) என்ற மிகப் பிரசித்திப்பெற்ற குருவிடம் ‘சீலாட்’ எனும் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

==படை தளபதி==
==படை தளபதி==
Line 8: Line 8:
ஹாங் துவாவைப் பற்றிய குறிப்புகள் பழைய மலாய் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மலாய் வரலாறு (Sejarah Melayu) மற்றும் ஹிகாயத் ஹாங் துவா (Hikayat Hang Tuah) ஆகியவை குறிப்பிடத்தக்கது. தனக்காக நீதி கேட்ட நண்பனை ஹாங் துவா கொன்றது சரியா தவறா என்ற விவாதம் மலாய் வாசகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. ஆட்சியைக் கைப்பற்ற பல உயிர்களைக் காரணமின்றி கொன்றதற்கான மரண தண்டனையாக அதை ஏற்கலாம் என்று கூறும் சாராரும் உண்டு. இன்றும் கூட மலாக்கா மாநிலத்தில் ஹாங் துவா கல்லறை, ஹாங் துவா கிணறு என பல தடயங்களை அரசாங்கம் பராமரிக்கிறது. இருப்பினும் சரியான ஆதாரங்கள் இல்லாததால் புத்தகக்குறிப்புகள் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எவ்வாராயினும், மலாய் மக்களிடையே போற்றப்படும் ஹங் துவா மலாக்கா வரலாற்றிலும் மலாக்கா அரசவை வரலாற்றிலும் இடம் பெரும் முக்கிய வரலாற்று அதிவீரனாகக் கருதப்படுகிறார்.

==மாற்று வரலாறு==
==மாற்று வரலாறு==
ஹாங் துவா என்னும் வீரன் சீனாவில் இருந்து மலாக்காவுக்கு வந்தவன் என்கிற மாற்று பார்வையும் சில வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, மலாக்காவைச் சுல்தான் மன்சூர் ஷா (1456–1477) ஆட்சி செய்த போது சீனாவில் மிங் பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. சுல்தான் மன்சூர் ஷா சீனாவுடன் நல்லுறவைப் பேணினார். சீனாவுக்கு இரண்டு முறை பயணம் செய்து சீன அரசரைச் சந்திந்தார். சீன அரசர் மலாக்கா மன்னருக்கு இளவரசி ஹாங் லீ போவை மணமுடித்துக் கொடுத்து மலாக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஹாங் லீ போ மலாக்காவுக்குத் தன் தோழிகளுடனும் காவல் வீரர்களுடனும் வந்தார். ஹாங் லீ போவுக்குக் காவல் படைத் தலைவராக அவருடன் ஹாங் துவாவும் வந்து மலாக்கா அரண்மனையில் பணியேற்றார். அவர் மிகச்சிறந்த வீரராகவும் அரச விசுவாசியாகவும் இருந்ததோடு உள்ளூரில் இருந்த வீரர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து ஹாங் கஸ்தூரி, ஹாங் ஜெபாட், ஹாங் லெக்கீர், ஹாங் லுக்கியு என்கிற வீரர்களை தன் நண்பர்களாகக் கொண்டிருந்தார்.
ஹாங் துவா என்னும் வீரன் சீனாவில் இருந்து மலாக்காவுக்கு வந்தவன் என்கிற மாற்று பார்வையும் சில வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, மலாக்காவைச் சுல்தான் மன்சூர் ஷா (1456–1477) ஆட்சி செய்த போது சீனாவில் மிங் பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. சுல்தான் மன்சூர் ஷா சீனாவுடன் நல்லுறவைப் பேணினார். சீனாவுக்கு இரண்டு முறை பயணம் செய்து சீன அரசரைச் சந்தித்தார். சீன அரசர் மலாக்கா மன்னருக்கு இளவரசி ஹாங் லீ போவை மணமுடித்துக் கொடுத்து மலாக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஹாங் லீ போ மலாக்காவுக்குத் தன் தோழிகளுடனும் காவல் வீரர்களுடனும் வந்தார். ஹாங் லீ போவுக்குக் காவல் படைத் தலைவராக அவருடன் ஹாங் துவாவும் வந்து மலாக்கா அரண்மனையில் பணியேற்றார். அவர் மிகச்சிறந்த வீரராகவும் அரச விசுவாசியாகவும் இருந்ததோடு உள்ளூரில் இருந்த வீரர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து ஹாங் கஸ்தூரி, ஹாங் ஜெபாட், ஹாங் லெக்கீர், ஹாங் லுக்கியு என்கிற வீரர்களை தன் நண்பர்களாகக் கொண்டிருந்தார்.
==கற்பனை கதை==
==கற்பனை கதை==
ஹாங் துவாவோடு மேலும் நான்கு நண்பர்கள் மலாக்காவில் சிறந்த வீரர்களாக இருந்ததாகக் கூறப்படுவதை மாகாபாரத பஞ்சபாண்டவர் ஐவரின் தாக்கத்தால் உருவான கற்பனைக் கதை என்று மறுப்போரும் உள்ளனர். மலாக்காவில் சிறந்து விளங்கிய ஹாங் துவாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்க இவ்வாறான புராணத் தொடர்புக் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
ஹாங் துவாவோடு மேலும் நான்கு நண்பர்கள் மலாக்காவில் சிறந்த வீரர்களாக இருந்ததாகக் கூறப்படுவதை மகாபாரத பஞ்சபாண்டவர் ஐவரின் தாக்கத்தால் உருவான கற்பனைக் கதை என்று மறுப்போரும் உள்ளனர். மலாக்காவில் சிறந்து விளங்கிய ஹாங் துவாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்க இவ்வாறான புராணத் தொடர்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.
== உசாத்துணை ==
== உசாத்துணை ==
*Jan Knappert, 1980. Malay Myths and Legends. Kuala Lumpur: Heinemann Educational Books.

Line 20: Line 20:
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:மலேசிய பண்பாடு]]
[[Category:Spc]]

Latest revision as of 15:46, 22 June 2023

Hang Tuah, Muzium Negara - cropped.jpg

ஹாங் துவா: மலேசிய தொன்மங்களில் புகழப்படும் வீரர். ஹாங் துவா ஒரு துணிச்சலான, அரச விசுவாசம் கொண்ட வீரனாகக் கருதப்படுகிறார். தன் வீரத்தாலும், மதிநுட்பத்தாலும், மலாக்கா அரசுக்கும் அரணாக இருந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

ஆரம்ப கால வாழ்க்கை

வரலாற்று பதிவுகளின்படி, அவர் சுமார் 1444 -ல் மலாக்காவில் உள்ள சுங்கை டுயோங் (Kampung Duyong) எனும் கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தையின் பெயர் ஹாங் மஹ்மூட் (Hang Mahmud) அவரது தாயார் டாங் மெர்டு வாத்தி (Dang Merdu Wati). அவரது தந்தையும் ஒரு காலத்தில் அரண்மனையின் நம்பகமான முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ஹாங் துவா ‘சீலாட்’ எனப்படும் தற்காப்புக் கலையில் கைத்தேர்ந்தவர். அவரும் அவரது 4 சகாக்களாக இருந்த ஹாங் ஜெபாத், ஹாங் கஸ்தூரி, ஹாங் லெகிர் மற்றும் ஹாங் லெகியு லேடாங் மலைக்குச் சென்று அடி புத்ரா (Adiputra) என்ற மிகப் பிரசித்திப்பெற்ற குருவிடம் ‘சீலாட்’ எனும் தற்காப்புக் கலையைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்புகள் உள்ளன.

படை தளபதி

ஒரு நாள் ஆபத்தில் சிக்குண்ட மலாக்கா அமைச்சரைக் ஹாங் துவாவும் அவரது சகாக்களும் காப்பாற்றினர். அவர்களின் சாமர்த்தியத்தாலும் வீரத்தாலும் கவரப்பட்ட அமைச்சர் அனைவரையும் தனது வீட்டிற்கு வரவழைத்து உபசரித்து அரண்மனையிலேயே வேலைக்கும் சேர்த்தார். ஹாங் துவாவின் வீரத்தைக் கண்டு மன்னர் அவரைக் கடற்படைக்குத் தளபதியாக நியமித்தார். மலாக்கா அப்போது முக்கிய துறைமுகமாக விளங்கியது. ஹாங் துவாவின் வீரமும் விசுவாசமும் மன்னரையும் மக்களையும் கவர்ந்தது. ஹாங் துவா 15 -ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற மலாய் கடற்படைத் தளபதியாகத் திகழ்ந்தார்.

வரலாற்றுச் சான்றுகள்

ஹாங் துவாவைப் பற்றிய குறிப்புகள் பழைய மலாய் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் மலாய் வரலாறு (Sejarah Melayu) மற்றும் ஹிகாயத் ஹாங் துவா (Hikayat Hang Tuah) ஆகியவை குறிப்பிடத்தக்கது. தனக்காக நீதி கேட்ட நண்பனை ஹாங் துவா கொன்றது சரியா தவறா என்ற விவாதம் மலாய் வாசகர்கள் மத்தியில் எப்போதும் உண்டு. ஆட்சியைக் கைப்பற்ற பல உயிர்களைக் காரணமின்றி கொன்றதற்கான மரண தண்டனையாக அதை ஏற்கலாம் என்று கூறும் சாராரும் உண்டு. இன்றும் கூட மலாக்கா மாநிலத்தில் ஹாங் துவா கல்லறை, ஹாங் துவா கிணறு என பல தடயங்களை அரசாங்கம் பராமரிக்கிறது. இருப்பினும் சரியான ஆதாரங்கள் இல்லாததால் புத்தகக்குறிப்புகள் வாய்மொழிக் கதைகளின் தொகுப்பாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. எவ்வாராயினும், மலாய் மக்களிடையே போற்றப்படும் ஹங் துவா மலாக்கா வரலாற்றிலும் மலாக்கா அரசவை வரலாற்றிலும் இடம் பெரும் முக்கிய வரலாற்று அதிவீரனாகக் கருதப்படுகிறார்.

மாற்று வரலாறு

ஹாங் துவா என்னும் வீரன் சீனாவில் இருந்து மலாக்காவுக்கு வந்தவன் என்கிற மாற்று பார்வையும் சில வரலாற்றாசிரியர்களால் முன்வைக்கப்படுகிறது. அதன் சுருக்கமாக, மலாக்காவைச் சுல்தான் மன்சூர் ஷா (1456–1477) ஆட்சி செய்த போது சீனாவில் மிங் பேரரசு ஆட்சி செய்து கொண்டிருந்தது. சுல்தான் மன்சூர் ஷா சீனாவுடன் நல்லுறவைப் பேணினார். சீனாவுக்கு இரண்டு முறை பயணம் செய்து சீன அரசரைச் சந்தித்தார். சீன அரசர் மலாக்கா மன்னருக்கு இளவரசி ஹாங் லீ போவை மணமுடித்துக் கொடுத்து மலாக்காவுக்கு அனுப்பி வைத்தார். ஹாங் லீ போ மலாக்காவுக்குத் தன் தோழிகளுடனும் காவல் வீரர்களுடனும் வந்தார். ஹாங் லீ போவுக்குக் காவல் படைத் தலைவராக அவருடன் ஹாங் துவாவும் வந்து மலாக்கா அரண்மனையில் பணியேற்றார். அவர் மிகச்சிறந்த வீரராகவும் அரச விசுவாசியாகவும் இருந்ததோடு உள்ளூரில் இருந்த வீரர்களுக்குப் பயிற்சிகள் கொடுத்து ஹாங் கஸ்தூரி, ஹாங் ஜெபாட், ஹாங் லெக்கீர், ஹாங் லுக்கியு என்கிற வீரர்களை தன் நண்பர்களாகக் கொண்டிருந்தார்.

கற்பனை கதை

ஹாங் துவாவோடு மேலும் நான்கு நண்பர்கள் மலாக்காவில் சிறந்த வீரர்களாக இருந்ததாகக் கூறப்படுவதை மகாபாரத பஞ்சபாண்டவர் ஐவரின் தாக்கத்தால் உருவான கற்பனைக் கதை என்று மறுப்போரும் உள்ளனர். மலாக்காவில் சிறந்து விளங்கிய ஹாங் துவாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்க இவ்வாறான புராணத் தொடர்பு கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற வாதங்களும் முன்வைக்கப்படுகின்றன.

உசாத்துணை

✅Finalised Page