being created

வைக்கம் முகமது பஷீர்

From Tamil Wiki
Revision as of 06:10, 10 April 2022 by CashelBloom (talk | contribs)

இந்தியாவின் மிகச்சிறந்த பத்து எழுத்தாளர்களின் பட்டியலில் ஒருவரென அனைவராலும் சுட்டிக் காட்டப்படும் ஒரு பெயர் வைக்கம் முகம்மது பஷீர். நவீன மலையாள இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியான பஷீர், எளிமையான வார்த்தைகள், மிகைப்படுத்தல்கள் இல்லாத நடை, இயல்பு வாழ்க்கையோடுப் பின்னிப் பிணைந்திருக்கும் கதாபாத்திரங்கள் இவற்றால் அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் படைப்பாளியாகப் புகழ் பெற்றிருந்தார். வெளிப்படையான நையாண்டியும், சுயஎள்ளலும் அவரது எழுத்துக்கே உரியது. அவர் நாவல்களும், சிறுகதைகளும் எழுதியுள்ளார்.

1வாழ்க்கைக் குறிப்பு

1.1 பிறப்பு, இளமை

1908 -ம் ஆண்டு ஜனவரி 19-ம் நாள் கேரளாவில் உள்ள வைக்கம் தாலுகாவில் 'தலையோலப்பரம்பில்' ஆறு பிள்ளைகள் பிறந்த ஒரு குடும்பத்தில் மூத்த பிள்ளையாகப் பஷீர்பிறந்தார்.

பஷீரின் தந்தையார் பெயர் காயி அப்துல் ரகுமான், தாயார் பெயர் குஞ்ஞாச்சுமா. அதே ஊரில் மலையாளப் பள்ளியில் ஆரம்பக்கல்வியும் பின்னர் வைக்கம் ஆங்கிலப் பள்ளியிலும் கற்றார். காந்திஜியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். மலபாருக்குச் சென்று இந்திய தேசியக் காங்கிரசில் சேர்ந்தார். 1930-ல் உப்பு சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டார். புரட்சி அமைப்புகளின் கொள்கைகளைப் பரப்பவே உஜ்ஜீவனம் என்ற வார இதழைத் தொடங்கி நடத்தினார்.'பிரபா’ என்ற புனைப்பெயரில் கட்டுரைகள் எழுதினார். பஷீரின் பத்திரிகை தடை செய்யப்பட்டது. இவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதிலிருந்து தப்பிக்கவே இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து நாடோடி போலக் கழித்தார். சிறுகதைகளும் நாவல்களும் எழுத ஆரம்பித்தார்.

தனது பள்ளிப்படிப்பை முடிப்பதற்கு முன்பே வீட்டை விட்டு ஓடிவிட்டவர், இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டார். பலமுறை சிறைதண்டனை அனுபவித்தார். பகத் சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கி இயங்கினார். அவ்வமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ எனும் வாரப் பத்திரிகையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியா முழுக்க தேசாந்திரியாக அலைந்து திரிந்தார். ஆப்பிரிக்கா, அரேபியா போன்ற நாடுகள்வரைகூட அந்தத் தேசாந்திரி பயணம் நீண்டது. இந்தக் காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை என்று சொல்லிவிடலாம். சில வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கைக் கரைகளிலும் இந்துத் துறவியாகவும் இஸ்லாமியச் சூஃபியாகவும் வாழ்ந்தார். மலையாளத்தில் சிறுகதை, நாவல், உரைநடை என விரிவாக இயங்கி மலையாள இலக்கியத்தின் முக்கியமான முகமாக மாறினார். பத்மஸ்ரீ உள்பட பல்வேறு உயரிய விருதுகள் பெற்றவர். 1994 -ம் ஆண்டில் இதே நாளான ஜூலை 5-ம் நாளில் தனது 86வது வயதில் காலமானார். ஆரம்பத்தில் இடதுசாரிக் கருத்தியல்மீது நெருக்கம்கொண்டிருந்தவர், பின்நாள்களில் காந்தியக் கருத்தியலால் ஈர்க்கப்பட்டு தனது இறுதிக்காலம் வரை அதில் நிலைகொண்டிருந்தார்.

பஷீரை வாசிக்கும்போது பஷீரின் குரலை, அவரது உடல்மொழியை, புன்னகையை ஒரு வாசகன் உணர்வான். பஷீர் அவரது எழுத்துகளில் தனது குரலை நிலைக்கச் செய்துவிட்டார். அதற்கு எப்போதும் ஓய்வில்லை. அழிவில்லை. இந்த இடத்தில் பஷீரின் ஆளுமையை நாம் உணர்ந்துகொள்ளத் துணையாக இரண்டு படைப்புகளை இணைத்துத் தர விரும்புகிறேன். ஒன்று, கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் பஷீர் குறித்த கவிதை. மற்றொன்று அவரைப் பற்றி எம்.ஏ.ரஹ்மான் இயக்கிய ‘பஷீர் த மேன்’ எனும் ஆவணப்படம். இவை அவரைக் கூடுதலாக அறிந்துகொள்ள நமக்கு உதவும்.

5இலக்கிய முக்கியத்துவம்.

பஷீர் என்ற எழுத்தாளரை புரிந்துகொள்வதற்கு முன்பாக பஷீர் என்ற மனிதரை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சுதந்திர போராட்டம் வீறுகொண்டு நடைபெற்றுவந்த வேளையில் இளைஞரான பஷீர் தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார். விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார். கோழிக்கோடு கடற்கரையில் உட்கார்ந்து உப்பு தயாரிக்கிறார். ராஜதுரோக வழக்கு அவர் மீது விழுகிறது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அவர் இருந்தபோதான அனுபவங்கள் ‘மதிலுகள்’ எனும் நாவலாக பின்னாளில் உருவாகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி, ஆடு, பாம்பு, நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட 'சிங்கிடி முங்கன்' , 'எட்டுகால் மும்முஞ்சு' என விசித்திரமாக இருக்கும். தன் முதுமையை பற்றிச் சொல்லும்போது கூட 'நான் இப்போது ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்' என்கிறார் கிண்டலாக.

பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ராஜத்துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஷீர், அங்கு கிடைத்த அனுபவங்களையே 'மதிலுகள்' என்ற நாவலாக எழுதினார். சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன் மதில் ஒன்றின் இருபுறமும் இருந்து பேசிகொள்வதன் வாயிலாக உருவாகும் காதலும் அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் அற்புதமான இலக்கியமாக


பஷீர் என்ற எழுத்தாளரை புரிந்துகொள்வதற்கு முன்பாக பஷீர் என்ற மனிதரை புரிந்துகொள்ள வேண்டும். இந்திய சுதந்திர போராட்டம் வீறுகொண்டு நடைபெற்றுவந்த வேளையில் இளைஞரான பஷீர் தனது வீட்டை விட்டு வெளியேறுகிறார். விடுதலை போராட்டத்தில் தீவிரமாக பங்கெடுத்தார். கோழிக்கோடு கடற்கரையில் உட்கார்ந்து உப்பு தயாரிக்கிறார். ராஜதுரோக வழக்கு அவர் மீது விழுகிறது. இதன் காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் அவர் இருந்தபோதான அனுபவங்கள் ‘மதிலுகள்’ எனும் நாவலாக பின்னாளில் உருவாகிறது.

மனிதர்கள் மட்டுமின்றி பஷீரின் கதைகளில் அவர் வீட்டு கோழி, ஆடு, பாம்பு, நரி என அனைத்திற்கும் முக்கியத்துவம் உண்டு. அவரது காதாபாத்திரங்களின் பெயர்கள் கூட 'சிங்கிடி முங்கன்' , 'எட்டுகால் மும்முஞ்சு' என விசித்திரமாக இருக்கும். தன் முதுமையை பற்றிச் சொல்லும்போது கூட 'நான் இப்போது ஐந்தாறு தரமான வியாதிகளுக்குச் சொந்தக்காரன்' என்கிறார் கிண்டலாக.

பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் ராஜத்துரோக வழக்கு சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பஷீர், அங்கு கிடைத்த அனுபவங்களையே 'மதிலுகள்' என்ற நாவலாக எழுதினார். சிறையில் இருக்கும்போதே அவருக்கு சிறையில் பெண்கள் பகுதியில் இருக்கும் ஒருவருடன் மதில் ஒன்றின் இருபுறமும் இருந்து பேசிகொள்வதன் வாயிலாக உருவாகும் காதலும் அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களும் அற்புதமான இலக்கியமாக உருவானது.

சிறைச்சாலைக்குள் பீடி, அச்சு வெல்லம், ஊறுகாய் என்று நிறையப் பொருட்கள் வெகு சுலபமாக விற்கப்படுகின்றன . சிறை வார்டன்களுக்கு வழங்கப்படும் லஞ்சம், சிறைகளின் உள்ளும் தலைவர்கள் வாழும் சொகுசு வாழ்க்கை என்று பஷீர் தனது மதிலுகள் நாவலில் சிறைத்துறை சீர்கேடுகளை உரைக்கிறார். சமூகத்தின் மீது அதீத அக்கறை கொண்ட எழுத்தாளனாக மதிலுகள் குறுநாவலில் வைக்கம் முகமது பஷீர் உருவெடுத்தார்.

எனது சதையும், ரத்தமும், எலும்பும் தோலும் அனைத்தும் இந்தியாவுக்கே சொந்தம் என்று சொன்ன வைக்கம் முகமது பஷீர், வீட்டை விட்டு வெளியேறி நாடோடி வாழ்க்கை வாழ்ந்தவர். கப்பல் ஊழியர், சமையற்காரர், சூதாட்டக்காரர், திருடன் என பல பாத்திரங்களை வாழ்க்கையில் ஏற்றவர்.

பஷீர் சில காலம் மனநோயால் பீடிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் மனம் பேதலித்தவர்களுடன் இருந்தபோது அவர், ‘பாத்தும்மாயுடே ஆடு’ என்ற நாவலை எழுதினார். அதன் முன்னுரையில் அவர் எழுதுகிறார்.

நாலு பக்கங்களிலும் 20, 30 பைத்தியக்காரர்கள் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். கைகளில் விலங்கு பூட்டியவர்களும், கால்கள் தளைகளால் பிணைக்கப்பட்டவர்களுமாகப் பலவிதமான மனிதர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தார்கள் என்று எழுதுகிறார். பஷீர் என்ற எழுத்தாளரின் நல்ல அதிர்ஷ்டத்தின் ஒரு பகுதியே பஷீரின் பைத்திய நிலை, அவரது ஆழங்காண முடியாத வாழ்க்கைத் தத்துவத்தில் இந்த உண்மையைக் காணலாம் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் எம்.முகுந்தன்.

பஷீர் தனது கதைகளில் உண்மையைத் தேடுபவராக இருந்தார். பஷீரின் நாவல்கள் அனைத்தும் கேரளத்தின் முஸ்லீம் சமுதாய நிலையை விவரிப்பவை. ‘பாத்தும்மாயுடே ஆடு’, ‘முகச்சீட்டுகளிக்காரண்டே மகள்’, ‘ஆனைவாரியும் பொன்குருசும்’ போன்ற நாவல்களில் தனது சமூகத்தைப் பற்றி எடுத்துரைக்கும் மனப்பான்மை அவரிடத்தில் இருந்தது. ‘என்டுப்புப்பாக் கோரான யுண்டார்னு’ ( எனது தாத்தாவிடம் ஒரு யானை இருந்தது) என்ற நாவலுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. அதன்பேரில் சிலகாலம் இந்த நாவலுக்கு தடையும் விதிக்கப்பட்டது.

பஷீரின் கதையில் வரும் எந்தப் பாத்திரத்துக்கு எதிராகவும் நமது மனங்களில் வெறுப்போ, அருவருப்போ எழ முடியாது. பஷீரின் பெரும்பாலான கதைகள் நான் என்று தொடங்கி பஷீரையே பிரதான பாத்திரமாகக் கொண்ட கதைகள். அப்படி இருப்பதனால் அவர் கதைகளில் வரும் சம்பவங்களும், சமூகம், தலைவர்கள், சம்பிரதாயங்கள் பற்றிய கிண்டல்களும், அதே கிண்டல் கலந்த பார்வையை கொண்டு சமூகத்தின் மீது கேள்வி எழுப்பும் மனசாட்சியாக இருக்கிறார் பஷீர்.

பால்யகால சகி, பாத்துமாயுடே ஆடு, மதிலுகள் என நூறு பக்கங்களுக்கு உள்ளாகவே அவர் எழுதிய ஒவ்வொரு நாவல்களும் நூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கும். பஷீர் என்ற எழுத்தாளன் நீண்ட பிரசங்க முறையைப் பின்பற்றவில்லை. பக்கம் பக்கமாக எழுதிக் குவிக்கவில்லை. ஆனால், மனிதரின் மனசாட்சியாக இருந்து பேசியிருக்கிறார்.

முடிவற்ற சூன்யம் என்றால் வெறுமை அதாவது ஒன்றுமில்லாமை என்பது பொருள். அந்த வெறுமையில் இருந்துதான் எல்லாம் தோன்றியிருக்கிறது. தெரிந்தது, தெரியாதது அனைத்தும் என்று கூறும் பஷீரின் படைப்புகளும் வெறுமையில்தான் தொடங்கியிருக்கின்றன.

ஆனால், பஷீர் இன்னமும் இலக்கிய வாசகர்களிடம் முழுமையாகி இருக்கிறார். எளிமையின் பூரணமாக. இன்னும் நிறைந்துகொண்டே இருப்பார். ஒளிவீசும் முழுநிலவாக.

6மரணம் / மறைவு

வைக்கம் முகமது பஷீர், 1994-ம் ஆண்டு ஜூலை 5ம் தேதி, தன்னுடைய 86-வது வயதில் மறைந்தார்.

7 வாழ்க்கை வரலாறு நூல்

பஷீர் தனிவழியிலோர் ஞானி, என்கிற அவரது வாழ்க்கை வரலாறு நூல் பேராசிரியர் எம்.கே.ஸாநுவால் எழுதப்பட்டது. இதை தமிழில் யூமா வாசுகி மொழிபெயர்க்க பாரதி புத்தகாலயம் வெளியிட்டது.

8அவர் பெற்ற விருதுகள்

  • பத்மஸ்ரீ விருது (1982)
  • கேரள சாகித்ய அக்காதமி விருது
  • மத்திய சாகித்ய அக்காதமி விருது
  • வள்ளத்தோள் விருது 1993

9மற்றவை

10படைப்புகள்

10.1நாவல்கள்

  • 1. காதல் கடிதம்
  • 2. பால்யகால சகி
  • 3. சப்தங்கள்
  • 4. எங்க உப்புப்பாவுக்கொரு ஆனையிருந்தது
  • 5. மரணத்தின் நிழலில்
  • 6. வாழ்க்கையின் நிழற் சுவடுகள்
  • 7. பாத்துமாவின் ஆடு
  • 8. மதிலுகள்
  • 9. தாரா ஸ்பெஷல்ஸ்
  • 10. மாந்திரிகப் பூனை
  • 11. காதலின் தினங்கள்
  • 12.காதல் கரப்பான்

10.2சிறுகதைகள்

  • ஜென்ம தினம்
  • போலீஸ்காரனின் மகள்
  • ஐசுக்குட்டி
  • நினைவுக் குறிப்பு
  • அம்மா
  • மூடர்களின் சொர்க்கம்
  • ஏழைகளின் விலைமாது
  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • ஒரு சிறைப்பறவையின் புகைப்படம்
  • பசி
  • நீலவெளிச்சம்
  • ஒரு பகவத் கீதையும் சில முலைகளும்
  • ஆனை முடி
  • அனல் ஹக்
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • செகண்ட் ஹாண்ட்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • பூவன்பழம்
  • சிங்கிடி முங்கன்
  • புனிதரோமம்
  • யா இலாஹி
  • கள்ள நோட்டு
  • மனைவியின் காதலன்
  • பூ நிலவில்
  • நிலவைக் காணும்போது
  • அபூர்வ தருணங்கள்
  • முதல் முத்தம்
  • ஆளரவமற்ற வீடு
  • ஏழைகளின் விலைமாது
  • கால் சுவடு
  • இடியன் பணிக்கர்
  • இரட்டிப்பு
  • வளையிட்ட கை
  • தங்கம்
  • பூமியின் வாரிசுதாரர்கள்
  • நூறுரூபாய் நோட்டு
  • எனது நைலான் குடை
  • பர்ர்ர் . . . !
  • சிரிக்கும் மரப்பாச்சி
  • தங்க மாலை
  • எட்டுக்காலி மம்மூஞ்ஞு
  • ரேடியோகிராம் என்னும் ரதம்
  • ஒரு கணவனும் மனைவியும்
  • மனைவியைத் திருடிச்செல்ல ஆள் தேவை
  • நோட்டு

10.3 திரைக்கதை

  • பார்கவி நிலையம்

10.4 மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள்

  • உலகப் புகழ்பெற்ற மூக்கு
  • பாத்துமாவின் ஆடு
  • பால்யகால சகி
  • மதில்கள்

ஆவணப்படம்

இரண்டு படைப்புகளை இணைத்துத் தர விரும்புகிறேன். ஒன்று, கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் பஷீர் குறித்த கவிதை. மற்றொன்று அவரைப் பற்றி எம்.ஏ.ரஹ்மான் இயக்கிய ‘பஷீர் த மேன்’ எனும் ஆவணப்படம். இவை அவரைக் கூடுதலாக அறிந்துகொள்ள நமக்கு உதவும்.

11உசாத்துணை

சு.பொ. அகத்தியலிங்கம் (25 மே 2014). "படைப்பாளியின் உள்மனதை ஊடுருவி". தீக்கதிர் தமிழ் நாளிதழ்.

https://www.google.com/amp/s/www.vikatan.com/amp/story/oddities/miscellaneous/94447-vaikom-muhammad-basheer-memorial-day-article

இலக்கியத்தின் மகிழ்ச்சியான தொன்மம் வைக்கம் முகமது பஷீர்! - நினைவுதினப் பகிர்வு

ஆழம் காண முடியாத வாழ்க்கைத் தத்துவம்' - எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் நினைவு தின சிறப்புக் கட்டுரை!

https://www.google.com/amp/s/www.kalaignarseithigal.com/amp/story/opinion%252F2020%252F07%252F05%252Fwriter-vaikom-mohammad-basheer-memorial-day-special-article

By பி.என்.எஸ்.பாண்டியன்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.