வே. சரவணமுத்து

From Tamil Wiki
Revision as of 20:10, 19 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "வே. சரவணமுத்து (பிப்ரவரி 2, 1921) == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலில் நாடகக் கலைஞர் வேலுப்பிள்ளைக்கும், அன்னலட்சுமிக்கும் மகனாக பிப்ரவரி 2, 1921இல் சரவணமுத்து பிறந்தா...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வே. சரவணமுத்து (பிப்ரவரி 2, 1921)

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் இணுவிலில் நாடகக் கலைஞர் வேலுப்பிள்ளைக்கும், அன்னலட்சுமிக்கும் மகனாக பிப்ரவரி 2, 1921இல் சரவணமுத்து பிறந்தார். யாகோண்டாவில் இந்து மகாவித்தியாலயம் பாடசாலையில் ஆரம்பக் கல்வியை சண்முக வாத்தியாரிடம் மூன்று ஆண்டுகள் பயின்றார். பெருளாதாரச் சிக்கல் காரணமாக பாடசாலைக் கல்வியினை நிறுத்திக் கொண்டு யாழ்ப்பாணத்திலேயே சிறு கைத்தொழில்களில் ஈடுபட்டார். பன்னிரெண்டு வயதிலிருந்து நாடகக்கலையால் ஈர்க்கப்பட்டார். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடகங்களில் நடந்த்திற்காக வந்த சந்திராவை திருமணம் செய்து கொண்டார்.

கலை வாழ்க்கை

இணுவில் நாடகத்தை வழிநடத்திய ”மனேஜர்” கதிர்காமு சரவணமுத்துவின் நாடகப் பிரவேசத்திற்கு ஊக்கியாக இருந்தார். "மனேஜர் கதிர்காமு" இசையில் ஆர்வம் மிக்க சிறுவர்களை ஒன்று சேர்த்து நாடகங்களை பழக்கி கோவில்களிலேயே அரங்கேற்றி வளர்த்தார். முதன் முதலில் சரவணமுத்து சாவித்திரி இசைநாடகத்தில் சாவித்திரி வேடமிட்டு பாராட்டுக்களைப் பெற்றார். சர்மாமாஸ்ரரிடம் ஐந்து வருடங்கள் ஹார்மோனியம் கற்றுக்கொண்டார்

இந்தியாவிலிருந்து ஒரு பெரிய நாடகக் கம்பெனி ஒன்று யாழ்ப்பாணம் வந்தது. அது முதன்முதல் இனுவையூர் மஞ்சத்தடி முருகன் ஆலயத்தில் ”கண்ணகி நாடகம்” மேடையேற்றினார்கள். அதற்கு ஹார்மோனியம் வாசித்தார். இந்தியாவிலிருந்து விஸ்வநாதன் பதினைந்து பேர் கொண்ட நாடககம்பனி ஒன்றை இலங்கை மட்டக்களப்பிற்கு கொண்டு வந்தார். அது இலங்கையில் ஒன்பது மாதகாலம் இருந்தது. அதற்கு சரவணமுத்து ஹார்மேனியம் வாசித்து புகழ் பெற்றார்.

இணைந்து நடித்தவர்கள்
  • நெல்லியடி ஆழ்வாப்பிள்ளை
  • கன்னிகா
  • பரமேஸ்வரி
  • ராசசிங்கம்
  • நாகசிங்கம்
  • எஸ்.கே. செல்லையாபிள்ளை

விருதுகள்

நடித்த நாடகங்கள்

  • சாவித்திரி
  • வள்ளி திருமணம்: வள்ளி
  • பவளக்கொடி

உசாத்துணை