வே.க. பாலசிங்கம்

From Tamil Wiki
Revision as of 06:20, 23 June 2022 by Ramya (talk | contribs) (Created page with "வே.க. பாலசிங்கம் (ஆகஸ்ட் 5, 1931) ஈழத்து இசை நாடகக்கலைஞர். இசை ஆசிரியர். இசை நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். == வாழ்க்கைக் குறிப்பு == இலங்கை யாழ...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

வே.க. பாலசிங்கம் (ஆகஸ்ட் 5, 1931) ஈழத்து இசை நாடகக்கலைஞர். இசை ஆசிரியர். இசை நாடகங்கள் பல நடித்ததுடன், பல நாடகங்களை நெறியாள்கை செய்து அரங்கேற்றினார்.

வாழ்க்கைக் குறிப்பு

இலங்கை யாழ்ப்பாணம் கலைமகள் வீதி ஆரியாலையில் ஆகஸ்ட் 5, 1931இல் பிறந்தார். இவரின் தந்தையும், சிறிய தந்தையாரும் நாடகக் கலைஞர்கள். ஆசிரியராகப் பணியாற்றினார். ஆசிரியப்பணி செய்து கொண்டிருந்த பவளத்தை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப்பின் பொலிகண்டி வல்வெட்டித்துறைக்கு இடம்பெயர்ந்தார்.

கலை வாழ்க்கை

குடும்பத்தில் தந்தை, சிறிய தந்தை, தாயாரின் தந்தையென பலரும் கூத்தில் ஈடுபட்டிருந்ததால் இயல்பாகவே பாலசிங்கம்

நாட்டுக்கூத்து நாடகங்களில் நடித்தார். அண்ணாவியார் நீ. கணபதிப்பிள்ளையின் நெறியாள்கையில் ”காத்தான் கூத்து” என்ற சிந்து கூத்தில் பாலகாத்தன் பாத்திரத்தில் நடித்தார். அண்ணாவியார். நீ. செல்லக்கண்டு ஒவ்வொரு நாடகத்திலும் ஒவ்வொரு பாத்திரம் வழங்கினார். இசையை கேள்வி ஞானம் மூலம் கற்றுக் கொண்டார். பதினாறு வயதுக்குட்பட்ட காலத்தில் பெண் வேடமிட்டு நடித்தார். கன்னிக்கோட்டையில் கதாநாயகன் மணிமாறனாக நடித்தார். “சகோதர் விரோதி”, ”பதவி மோகம்” என்ற சரித்திர நாடகங்களில் வில்லன் பாத்திரத்தில் நடித்து பாராட்டு பெற்றார். பல நாடகங்களை நெறியாள்கை செய்தார். முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தில் ஆசிரியப்பணி செய்து கொண்டிருந்தபோது அங்கு மாணவர்களுக்கு கூத்து நெறியாள்கை செய்து அரங்கேற்றினார். அயல் பாடசாலைகளில் இசை நாடகங்களைப் பழக்கி ஊக்கப்படுத்தினார். 
ஆசிரியர்கள்
  • நீ. செல்லக்கண்டு
  • நீ. கணபதிப்பிள்ளை
  • வே. ஐயாத்துரை
  • ரத்தினம்

விருதுகள்

  • முல்லை மாவட்ட குமுளமுனை மக்கள் ”பண்ணிசைச் செல்வர்” பட்டம் வழங்கினர்.
  • கொக்குத்தொடுவாய கிராம மக்கள் ”முத்தமிழ் வித்தன்” பட்டத்தினை அளித்தனர்.
  • வடமராட்சி அல்வாய் மனோகர கானசபா ”கலைமகிழ்வன்” பட்டம் அளித்தது.

நடித்த இசைநாடகங்களும் பாத்திரங்களும்

  • ஸ்ரீவள்ளி - வேடன், விருந்தன், வேலன்
  • பூதத்தம்பி - அந்திராசி (வில்லன்)
  • வாலிவதை - வாலி
  • கன்னிக்கோட்டை - மணிமாறன்

உசாத்துணை