under review

வேரில் பழுத்த பலா (நாவல்): Difference between revisions

From Tamil Wiki
mNo edit summary
mNo edit summary
Line 68: Line 68:


https://zenodo.org/record/848014#.YuY9LXZByM8
https://zenodo.org/record/848014#.YuY9LXZByM8
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]
{{ready for review}}

Revision as of 15:55, 31 July 2022

வேரில் பழுத்த பலா (1983) சு. சமுத்திரம் எழுதிய நாவல். அரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் அடையும் இன்னல்களை வெளிப்படுத்தும் நாவல் இது. இந்த நாவலுக்கு 1990ஆம் ஆண்டு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்தது.

வேரில் பழுத்த பலா (நாவல்)
வேரில் பழுத்த பலா (நாவல்)

வெளியீடு

சு. சுமுத்திரம் ‘வேரில் பழுத்த பலா’ என்ற இந்த நாவலை 1983ஆம் ஆண்டு எழுதினார்.

ஆசிரியர் அறிமுகம்

சு. சமுத்திரம்
சு. சமுத்திரம்

‘வேரில் பழுத்த பலா’ என்ற இந்த நாவலின் ஆசிரியர் சு. சமுத்திரம். இவர் 1941-ஆம் ஆண்டு பிறந்தவர். நெல்லை மாவட்டம் கடையம் பகுதியைச் சேர்ந்தவர். சிறு வயதில் பல்வேறு இன்னல்களுக்கிடையே தன்னுடைய பள்ளிப் படிப்பையும் கல்லூரிப் படிப்பையும் நிறைவு செய்தவர். பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்று பல்வேறு இடங்களில் பணியாற்றி, இறுதியில் அகில இந்திய வானொலி நிலையத்தில் தமிழ் சேவைப்பிரிவிலும் செய்தி வாசிப்புப் பிரிவிலும் பணிபுரிந்தார். 15 புதினங்கள், 8 குறும் புதினங்கள், 500 சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகள், நாடகம் ஆகியவற்றைப் படைத்துள்ளார்.

கதைச்சுருக்கம்

தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவன் சரவணன். இவனது அப்பா இவனது இளம்பருவத்திலேயே இறந்துவிட்டார். இவனுக்கு ஓர் அண்ணனும் ஒரு தங்கையும் உண்டு. அண்ணனின் மனைவி தங்கம்மா. அண்ணன் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துவிட்டார். அண்ணி வயல்வேலை பார்த்துச்  சரவணனைப் படிக்கவைத்தாள்.  சரவணன் படித்து அரசுப் போட்டித் தேர்வு எழுதி அரசு அலுவலகத்தல் உதவி இயக்குநர் பதவியில் அமர்ந்தார். தன்னுடனேயே தன் அம்மாவையும் தங்கையையும் தன் அண்ணியையும் குடியிருக்க வைத்தார்.

சரவணன் பணிபுரியும் அலுவலகம், பிற அரசு அலுவலகங்களுக்கு எழுதுபொருட்களை வாங்கி, வழங்கும் பணியினைச் செய்துவருகிறது. இதனால் பல்வேறு ஒப்பந்ததாரர்களின் கவனத்துக்குரியது. சரவணன் நேர்மையானவன் என்பதால் அவன் தவறான ஒப்பந்ததாரர்களுக்கு இடையூறாக இருக்கிறான். அவனைப் பல்வேறு வழியில் சிக்கவைக்க அவன் அலுவலகத்தல் பணிபுரிவோர் சதித்திட்டம் செய்கின்றனர். அதே அலுவகத்தில் படித்துப் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சிபெற்று பணியில் சேர்கிறாள் அன்னம். அவள் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவள் என்பதால் அவளைக் கீழ்நிலைப் பணியில் அமர்த்துகின்றனர். அதனையும் தட்டிக்கேட்கிறான் சரவணன்.

தன் தங்கையைத் தன்னைப் போன்ற நேர்மையான காவல்துறை உயர் அதிகாரியான ராமசாமி என்ற தன் நண்பனுக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்கிறான் சரவணன்.  ஒப்பந்ததாரர்கள் சரவணன் மீது வீண்பழி சுமத்தி அவனை அலுவலகத்தை விட்டே விரட்ட நினைக்கின்றனர். ஒட்டு மொத்த அலுவலகமும் சரவணனுக்கு எதிராகச் செயல்படுகிறது. அன்னம் மட்டும் அவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள். எல்லாச் சதிகளையும் முறியடித்து சரவணன் வெற்றிபெறுகிறான். அன்னத்தை மணமுடிக்கிறான்.

கதைமாந்தர்கள்

1. சரவணன் - உதவி இயக்குநர்

2. வசந்தா – சரவணனின் தங்கை

3. முத்தம்மா – சரவணனின் அம்மா

4. மணிமுத்து – சரவணனின் அண்ணன்

5. தங்கம்மா – மணிமுத்துவின் மனைவி

6. பத்மா – அலுவலகத் தலைமை எழுத்தர்

7. ராமச்சந்திரன் - அலுவலக அதிகாரி

8. உமா – முதுநிலை சுருக்கெழுத்தர்

9. அடைக்கலம் - அலுவலக உதவியாளர்

10. சௌரிராஜன் - நிர்வாக அதிகாரி

11. ஈஸ்வரி – தட்டச்சர்

12. சம்பந்தம் - அலுவலர்

13. அன்னம் - யு.டி.சி. பணியாளர்

14. கமலேக்கர் - பில்டிங் கான்டிராக்டர்

15. சௌரி நாராயணன் - அலுவலகப் பயன்பாட்டுப் பொருள் கான்டிராக்டர்

16. தங்கமுத்து – வினியோகப் பிரிவு கிளார்க்

17. பெருமாள், துரைச்சாமி – சரவணனின் ஊர்க்காரர்கள்  

18. ராமசாமி – ஐ.பி.எஸ். அதிகாரி

19. சீனிவாசன் - டெப்டி டைரக்டர்

20. சந்தானம் - எல்.டி.சி. பணியாளர்

21. பெருமாள் - சரவணனின் ஊர்க்காரர்

22. துரைசாமி – சரவணனின் ஊர்க்காரர்

23. கமலேக்கர் - சரவணனின் நண்பர்

24. தங்கமுத்து, சிதம்பரம் – அலுவலக ஊழியர்கள்

25. ராமசாமி – காவல்துறை அதிகாரி

இலக்கிய இடம்

எழுத்தாளர் சு. சமுத்திரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர். அவர் அரசு ஊழியராகப் பணியாற்றியவர். அரசு அலுவகங்களில் தன் சமூகத்தினர் படும் இடர்பாடுகளை நன்கு அறிந்தவர். அவற்றை உலகுக்குத் தெரியப்படுத்தவே இந்நாவலை எழுதியுள்ளார். பலா மரத்தின் வேரில் பழுத்த பாலாப்பழங்கள் வெளியே தெரியாது. ஆனால், அவை மிகுந்த சுவையோடு இருக்கும். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் திறமையுடையவர்களாகவும் வெளியுலகத்துக்குத் தெரியாதவர்களாகவும் இருப்பதாக இந் நாவலில் சுட்டியுள்ளார். சமூக நீதியையும் சரிநிகர் சமானத்தையும் வலியுறுத்தும், கோரும் படைப்பாக இந்த ‘வேரில் பழுத்த பலா’ நாவல் படைக்கப்பட்டுள்ளதால், இந்த நாவல் தமிழ் நாவல் இலக்கியத்தில் மார்க்சிய சித்தாந்தத்தை முன்வைக்கும் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

உசாத்துணை

https://www.vallamai.com/?p=87768

https://zenodo.org/record/848014#.YuY9LXZByM8



Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.